ஓவியாவை கைது செய்ய புகார்!…!

இரெண்டு நாட்களுக்கு முன்பு வெளியான ஓவியா நடித்த 90 எம் எல் திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம், முஸ்லீம் லீக் கட்சியினர் புகார் மனு அளித்துள்ளனர்.

நடிகர் சிம்பு இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு,பல்வேறு சர்ச்சைகள் வந்த வண்ணம் உள்ளது . ஆரம்பத்தில் இரட்டை அர்த்தம் வசனங்கள் என்று ஆரம்பித்து இன்று வரை விதவிதமான சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளது.

 

இந்நிலையில் இன்று சென்னை மாநகர காவல் ஆணையரிடம், முஸ்லீம் லீக் கட்சியினர் புகார் மனு அளித்துள்ளனர்.

அதில், நடிகை ஓவியா நடித்துள்ள 90 எம் எல் படத்தை தடை செய்ய வேண்டும் என்றும், அந்த படத்தின் இயக்குநர் மற்றும் ஓவியாவை கைது செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.