கடலுக்கடியில் புல்லட் ரயில் பாதை அமைக்க சீனா முடிவு

பெய்ஜிங்:

நாட்டின் முதல் தண்ணீருக்கடியில் புல்லட் ரயில் பாதை அமைக்கச் சீன அரசாங்கம் ஒரு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது, எனச் செய்திகள் வெளியாகியுள்ளது.

ஷாங்காய் நகரின் தெற்கு துறைமுக நகரமான நீங்போ முதல் சவ்ஷான் வரையிலான 77 கிமீ தூரத்திற்கான புல்லட் ரயில் பாதையில் 16.2 கிமீ தூரம் கடலுக்கடியில் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு செல்ல இருக்கிறது.

தற்போது முன்மொழியப்பட்டுள்ள சுரங்கப்பாதை 77 கிமீ யாங்க்-ஷோ ரயில்வே திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும். மேலும், இது சுற்றுலாப் பயணத்தை அதிகரிக்கவும், ஜீஜியாங் மாகாணத்திற்குள் இரண்டு மணி நேர பயண இடத்தைப் பெரும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

2005 ஆம் ஆண்டில் அரசாங்க போக்குவரத்துத் திட்டத்தில் முதலில் குறிப்பிடப்பட்டிருந்த யாங்க்-ஷோ ரயில் திட்டத்தின் சாத்தியமான ஆய்விற்கு நவம்பர் மாதம் பெய்ஜிங் ஒப்புதல் அளித்தது.

புதிய பாதையில் ரயில் ஷெஜியாங்கின் தலைநகரான ஹாங்சௌவிலிருந்து 80 நிமிடங்களில் சவ்ஷான்-க்கு பயணிக்கும். தற்போது, பஸ் மூலம் பயணிக்க 4.5 மணி நேரம் அல்லது தனிப்பட்ட வாகனம் மூலம் 2.5 மணி நேரம் ஆகும்.

இந்த வழித்தடத்தில், ஏழு நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன, இதில் நான்கு புதிய நிலையங்கள் மற்றும் மூன்று மறுகட்டமைப்புகள் அடங்கும்.

இந்த புதிய திட்டம், 25.2 பில்லியன் யுவான் (3 பில்லியன் டாலர்) மதிப்பில், அடுத்த ஆண்டு தொடங்கப்பட்டு 2025-ல் முடிக்கப்பட உள்ளது.