கனிமொழி இன்று முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்

kanimozhi
தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தனது முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை சேலம் மாவட்டத்தில் இன்று தொடங்குகிறார். இதையொட்டி, சென்னை கோபாலபுரத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை அவர் சந்தித்து வாழ்த்து பெற்றார்.