கருணாநிதிக்காக கவிதாஞ்சலி: பணியைத் துறந்த பெண் காவலரை மு.க.ஸ்டாலின் சந்தித்தார் ( வீடியோ)

றைந்த திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கற்பா பாடியதால், நடவடிக்கைக்கு ஆளாகி, பணியைவிட்டு விலகிய பெண் தலைமைக் காவலரை அவரது இல்லத்துக்குச் சென்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.

திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் முகநூல் பிரிவில் தலைமைக் காவலராகப் பணியாற்றுபவர் செல்வராணி ராமச்சந்திரன்.

திமுக தலைவர் கருணாநிதிமேல் மிகுந்த பற்று கொண்ட இவர், கடந்த ஆகஸ்ட் 7ம்  தேதி கருணாநிதி மறைந்ததை அடுத்து உருக்கமாக இரங்கற்பா ஒன்றை எழுதினார். அதை பாடி வாட்ஸ்அப்பில் வெளியிட்டார்.  இந்த வீடியோ வைரலானது. இது குறித்து ஆகஸ்டு 12 மற்றும் 13 தேதிகளில் ஊடகங்களில் செய்தி வெளியானது.

இந்த நிலையில்,  கடந்த ஆகஸ்டு 14-ம் தேதி திருச்சி நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் இருந்து, ”தாங்கள் காவல்துறையில் பணியாற்றிக்கொண்டே இதுபோன்று கவிதை இரங்கற்பா எழுதி காவல் பணியின் தன்மையை மீறி பதிவு செய்துள்ளீர்கள்.

இது நீங்கள் பணியின்மீது கொண்டுள்ள பற்றற்ற தன்மையையும், அலட்சியப்போக்கையும் காட்டுகிறது. எனவே இதுகுறித்து மூன்று நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு செல்வராணி விளக்கம் அளித்தார். ஆனாலும் அவரை நாகப்பட்டினத்துக்கு இடமாற்றம் செய்து உத்தரவு வந்தது. ஆனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் நேற்று திருச்சியில் நடைபெற்ற அனைத்துக் கட்சிகளின் ஆர்ப்பாட்டத்துக்கு வந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் செல்வராணியின் இல்லத்திற்கு சென்றார். அவரை செல்வராணியும், அவரது கணவரும் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

அப்போது ஸ்டாலினிடம் செல்வராணி, “நான் கிராமத்துப் பெண். எல்லோரையும் சித்தப்பா, பெரியப்பாவாகவே பார்ப்பேன். அந்த வகையில் கருணாநிதியும் எனக்கு தகப்பன் தான். எப்படி தகப்பன் என்று கேட்டு என் விளக்கத்தைக் கேட்காமல்  என்னை இடமாற்றம் செய்தார்கள்.

என் தகப்பன் இறந்து கிடக்கிறார். அவருக்காக ஒரு கண்ணீர் அஞ்சலி இரங்கற்பா கூட எழுதக்கூடாது என்றால் எனக்கு அந்த பணியே தேவையிலை என்று ராஜினாமா செய்துவிட்டேன்” என்று ஆவேசத்துடனும் நெகிழ்ச்சியுடனும் தெரிவிதார் செல்வராணி.

பிறகு இரங்கற்பாவை ஸ்டாலின் முன் அவர் படித்துக் காட்டினார். அவர்களிடம் இருந்து  விடைபெற்ற ஸ்டாலின், ‘சென்னை வரும்போது தன்னை சந்திக்கும்படியும், ஒரு சகோதரனாக தன்னை எப்போதும் அணுகலாம் என்றும் தெரிவித்து விடைபெற்றார்.

 அந்த வீடியோக்கள்:

 

 

 

 

 

#MKstalin #meets #womanpolice #resigned #Karunanidhi #PoetryObituary #video