கருணாநிதியை எதிர்த்து மாசிலாமணி போட்டி

karunanidhi3
திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாசிலாமணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தமாகா கூட்டணியில் இணைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயரை, அக்கட்சியின் தமிழ் மாநில செயலர் இரா.முத்தரசன் இன்று வெளியிட்டார்.

இதில் திமுக தலைவர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் தொகுதியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக மாசிலாமணி என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார்.