கருணாநிதி, கி. வீரமணி
கருணாநிதி, கி. வீரமணி

மிழக  சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அகில இந்திய அளவிலான கூட்டணி  ஒன்று உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
திராவிடர் கழகம், வரும் 20ம் தேதி திருச்சியில்  சமூக நீதி மாநாட்டை நடத்த இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை அக் கட்சயின் தலைவர் கி. வீரமணி ஏற்பாடு செய்து வருகிறார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி கலந்துகொள்ளும் இம்  மாநாட்டில் கலந்துகொள்ள காங்கிரஸின் அகில இந்திய துணைத்தலைவர் ராகுல்காந்திக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும் பீகாரில் காங்கிரசுடன்  கூட்டணி ஆட்சி அமைத்துள்ள  நிதிஷ்குமார் மற்றும்  லல்லுபிரசாத் யாதவ் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.
இவர்கள் மூவரும் இந்த “சமூக நீதி மாநாட்டில்” ஒரே மேடையில் தோன்றும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி நடந்தால் அகில இந்திய அளவில புது கூட்டணி உருவாகும் என்று கூறப்படுகிறது.
லாலு - ராகுல் - நிதீஷ்
லாலு – ராகுல் – நிதீஷ்

இதே நிகழ்வில்  இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் கலந்துகொள்ள வைக்கவும் முயற்சிகள் நடக்கின்றன. அப்படி நடந்தால், அதன் எதிரொலியாக தமிழகத்திலும் புது கூட்டணி உருவாகலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
அதாவது தற்போது மக்கள் நலக்கூட்டணியில் இருக்கும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணிக்கு வரக்கூடும் என்பது அவர்களது கணிப்பு.
“தற்போது அகில இந்திய அளவில் பா.ஜ.கவுக்கு எதிரான கூட்டணி அமைவது  காலத்தின் கட்டாயமாகிவிட்டது.  எதிர் துருவங்களாக இருந்த நிதீஷ் – லாலு ஆகியோர் பீஹாரில் கூட்டணி வைத்து  பா.ஜ.கவை வெற்றிகொண்டார்கள்.  அதே போன்ற ஒரு கூட்டணி அகில இந்திய அளவில் உருவாவதன் அவசியத்தை கம்யூனிஸ்ட் கட்சிகள் உணர்ந்துள்ளன. ஆகவே அவை, இந்த புதுக்கூட்டணிக்கு ஒத்துழைப்பு அளிக்க வாய்ப்பு இருக்கிறது.
இப்படி ஓர் கூட்டணிக்கு அச்சாரம் போட்டவர், தி.மு.க. தலைவர் கருணாநிதி.   அவரது ஆலோசனைப்படியே  திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி  அகில இந்திய தலைவர்களை அழைத்துள்ளார்” என்றும் கூறப்படுகிறது.