கருணாநிதி மீதான அவதூறு வழக்குகளை முடித்து வைத்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

திமுக முன்னாள் தலைவர்  கருணாநிதி மீது அவதூறு வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், அவர் காலமானதால் அனைத்து வழக்குகளும் முடித்து வைத்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சமீபத்தில் சென்னையில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. எம்.எல்.ஏ.க்கள் மீதான அவதூறு வழக்குகள் தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே   திமுக தலைவர் கருணாநிதி மீது 2011-14 ஆண்டு வரை தமிழக அரசால் பல அவதூறு வழக்குகள் தொடரப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் மரணமடைந்ததால் அந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என திமுக சார்பில் சிறப்பு நீதிமன்றத்தில்  முறையிடப்பட்டது.  அவரது இறப்பு சான்றிதழ்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதனை ஏற்றுக்கொண்ட சிறப்பு நீதிபதி கருணாநிதி மீதான அவதூறு வழக்குகளை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தார்.

கார்ட்டூன் கேலரி