கருத்துக்கணிப்பு முடிவுகள் பா.ஜ.க.வின் பேரழிவைக் காட்டுகின்றன – மார்க்கண்டேய கட்ஜு

டில்லி:

ந்து மாநில சட்டசபை தேர்தல்களின் கருத்துக்கணிப்பு முடிவுகள் பா.ஜ.க.வின் பேரழிவைக் காட்டுகின்றன, என்று முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் இந்தியாவின் பிரஸ் கவுன்சிலின் முன்னாள் தலைவர் மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.

மேலும், அந்த கணிப்பு சரியானது என நிரூபிக்கப்பட்டால், ராஜஸ்தான் மட்டுமல்லாது மத்தியப்பிரதேசம், சட்டிஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய இடங்களிளும் பாஜக படு தோல்வி அடையும், என்றார்.

பாஜக தோல்வி அடையும் பட்சத்தில், டெய்லிலோ வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தனது “யோகேந்திர யாதவ்’ஸ் லா-லா லாண்ட் காம்பிட்” என்ற கட்டுரையில் தாம் குறிப்பிட்டுள்ளது போல பெரிய அளவிலான இனவாத கலவரம் தூண்டப்படலாம் என்று எச்சரித்தார்.

இது குறித்து அவர் மேலும் விளக்கம் அளிக்கையில்,

காங்கிரஸ் அரை நூற்றாண்டுகள் ஆட்சியில் இருந்திருக்கிறது, ஆனால், பாஜக 10 வருடங்கள் மட்டுமே ஆட்சி செய்திருக்கிறது. இந்நிலையில், பாஜக சாம தான பேத தண்ட முறைகளை பயன்படுத்தி ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முயற்சி செய்யும், என்றார்.

மேலும், மத்தியிலும் பல மாநிலங்களிலும் அதிகாரத்தில் இருப்பது பாஜகவிற்கு பெரும் ஆதாயமாக உள்ளது. மேலும், மாநிலங்களை தனது நன்மைக்காக பயன்படுத்தும் என கூறினார்.

இருப்பினும், பாஜகவின் பிரதான பிரச்சனை என்னவென்றால், அதன் பாதுகாப்பான வாக்கு வங்கியானது மேல் சாதி இந்துக்களைக் கொண்டது, ஆனால் இந்த கூட்டணி (பிராமணர்கள், ராஜபுத்திரர்கள், பனியாக்கள், புமியர்கள் போன்றவை) உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் போன்ற பெரிய மாநிலங்களில் 20 சதவீதம் மட்டுமே உள்ளனர். தேர்தல்களில் வெற்றி பெற 30 சதவீததத்திற்கு மேல் வாக்குகள் தேவைப்படுகின்றன (மீதமுள்ள பகுதிகளுக்கு 50 சதவிகிதம் தேவை இல்லை). எனவே, கூடுதலாக 10 சதவீத வாக்குகளை பெறுவதே பாஜகவிற்கு முக்கிய பிரச்சனையாக உள்ளது.

சிலர், ராமர் கோவில் விவகாரம் குறித்த சர்ச்சை நீர்த்துப் போய்விட்டதால், இனி இந்த சூழ்ச்சி எடுபடாது என்கின்றனர். ஆனால், இந்த விவகாரத்தில் மேலும் ஆர்வத்தை தூண்டுவதற்கு மீண்டும் பாஜக சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், எனவே, எந்த நேரத்திலும் இனவாத கிளர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.