பெங்களூர்: கர்நாடகாவில் மீண்டும் நேற்று ஒரு போலீஸ்காரர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.   கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த போலீஸ் அதிகாரி கணபதி தற்கொலை செய்து கொண்டார். 51 வயதாகும் கணபதி  அங்குள்ள ஒரு லாட்ஜில் தங்கி இருந்தார். நேற்று அவர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது அறையிலிருந்து தற்கொலை செய்து கொள்வதாக எழுதிய கடிதம் கிடைத்தது.
Karnataka-police-officer-suicide_SECVPF
கடந்த மே மாதம்தான் டி.எஸ்.பி. கணபதி குடகு மாவட்டத்தில் இருந்து மங்களூர் ஐ.ஜி. ஆபீசுக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். அரசியல் நெருக்கடி காரணமாக கணபதி தற்கொலை செய்து இருக்கலாம் என்றும், கர்நாடக மந்திரி சபையில் மூத்த மந்திரியாக இருக்கும் ஒருவரது மகன் இதில் சம்பந்தப்பட்டு இருப்பதாகவும், அவரது தூண்டுதலால் உயர் அதிகாரிகள் கொடுத்த நெருக்கடியால்தான் கணபதி தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது.
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்புதான் கர்நாடக மாநிலம் சிக்க மங்களூரில் துணை சூப்பிரண்டாக வேலை செய்த காளப்பா கண்பா என்ற போலீஸ்காரர்  சூதாட்ட கும்பலிடம் இருந்து ரூ.10 லட்சம் லஞ்சம் பெற்றதாக  வழக்குப்பதிவு செய்ததால் தற்கொலை செய்தார்.. பெலகாவி முரா கோட்டில் உள்ள தனது உறவினர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
போலீசாரின் தொடர் தற்கொலை கர்நாடக போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.