u

ஸ்ரீயிடம். “ரெண்டுநாளா பேசுறாங்கனு சொல்ற அப்பறம் ஏன் என்கிட்ட சொல்லல… “சற்று ஆதங்கத்தோடு கேட்கிறாள் நாயகி.

பதில் இல்லாமால் மழுப்பும் ஸ்ரீ புதிதாக தெரிகிறாள். மேலும் நாயகியும் அபிநயாவும் பேசியதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஸ்ரீயில் பேச்சில் தெரிகிறது.

“சரி அபிநயா என்ன சொன்னாங்க சொல்லு…” என கேட்க.

“ஏதோ அவங்க frd கிட்ட தப்பா பேசியிருக்கான் அதை சொன்னாங்க ஆனா ஸ்ரீ… ஏ அவங்க அவ்வளவு டென்சன் ஆகனுன்னு தான் புரியல !” என்கிறாள் நாயகி.
நமட்டு சிரிப்போடு “காரணம் எனக்கு தெரியும்” என்கிறாள் ஸ்ரீ.

“என்ன !? “நாயகியின் கேள்விக்கு
செய்கையால் ஸ்ரீ பதில் சொல்ல…

“ச்ச என்ன இப்படி சொல்ற !! இருக்காது ஸ்ரீ.” கொஞ்சம் எரிச்சலோடு சொல்லும் நாயகியிடம்.

“எல்லாரையும் உன்ன மாறியே யோசிக்காத சிலர் எல்லாத்துக்கும் துணிஞ்சு தான் இருக்காங்க.” என்று அசால்ட்டாக ஸ்ரீ சொல்ல.

“இதெல்லாம் உனக்கு யார் சொன்னா !?” என கேட்கும் நாயகியிடம் ஸ்ரீ…

“எங்க aunty தான். அவங்க கிட்ட அபிநயாவே சொல்லியிருக்கு. யாரோ சொன்னா பொய்யின்னு சொல்லலாம் சம்மந்த பட்டவங்களே சொல்லும் போது.” சற்று வேகமாக சொல்லிமுடிக்கும் ஸ்ரீயிடம்

ஏ… உங்க aunty பொய் சொல்லலாம்ல உன் கிட்ட… எனக்கு என்னவோ நம்பமுடியல ஸ்ரீ” என்று நம்பிக்கையின்றி பேசுகிறாள் நாயகி.

“அவங்க ஏன் பொய் சொல்லணும் சொல்லு… “ஸ்ரீயின் பேச்சில் குழம்பும் நாயகி ஸ்ரீயிடமே

“ஸ்ரீ நீயும் அவன் தப்பானவனு நம்புறீயா !?” சற்று ஆதங்கத்தோடு கேட்கிறாள் நாயகி.

“ஒன்னும் புரியல aunty என்னடான்ன நிறைய பேர் சொல்றாங்க”.ஸ்ரீயிடமும் ஒரு குழப்பம் தெரிகிறது.

“நிறைய பேரா !? “சற்று அதிர்ச்சியோடு கேட்கிறாள் நாயகி.

“ஆமா அவனோட cell ல நிறைய பொண்ணுங்க போட்டோ இருந்திருக்கு அதை அபிநயா பார்த்திருக்காங்க aunty கிட்ட சொல்லியிருக்காங்க இவங்களுக்கு கொஞ்சம் தெரிந்திருக்கு.” என்று சொல்லும் ஸ்ரீயிடம்

“நம்ம கூட தான் ஒரு சில போட்டோ பார்த்தோம் அவன் frd ன்னு சொன்னானே. ” என்று சொல்லும் நாயகியிடம்

“ஒரு frd தான் இவனுக்காக அம்மா அப்பாவ விட்டுட்டு தனியா தங்கியிருக்குமா சொல்லு இவனுக்காக” என்று மேலும் ஒரு தகவல் சொல்கிறாள் ஸ்ரீ.

“அது யாரு !?” என கேட்கும் நாயகியை அழைத்து செல்கிறாள்.

“வா கா ட்றேன்.” Fb open பண்ணி அந்த பெண்ணின் டைம் லைனுக்குள் போக, பார்த்ததும் ஸ்ரீயிடம் நாயகி

“ஸ்ரீ இந்த பொண்ணோட போட்டோ காட்டிருக்கானே நம்ம கிட்ட… இது என்னோட பொண்ணு மாதிரி இதை தத்து எடுக்க போறேன்னு கூட சொன்னானே.” என்று சொல்ல

“ஆமா சொன்னான் ஆனா இந்த பொண்ணு இவனை மம்மினு கூப்பிடுமாம் ஆனா வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்காதாம் என்ன லாஜிக் இது !? உனக்கு ஒன்னு தெரியுமா சுதா பிரிஞ்சதே இதால தானாம்”. மேலும் ஒரு குண்டை தூக்கி போடுகிறாள் ஸ்ரீ.

“என்ன சொல்ற நீ ?!!! சற்று அதிர்ச்சியோடு நாயகி கேட்க

“இதுக்கே ஷாக் ஆகாதே… அவங்க சொல்றதை கேட்டா தலையே சுத்துது.யாராவது ஒருத்தர் போலீஸ் போனாலும் எல்லா பொண்ணுங்களும் மாட்டுவாங்கலாம்.” என்று சொல்லும் ஸ்ரீயிடம் குழப்பத்தோடு

“பொண்ணுக ஏன் மாட்டனும் !?” என கேட்கிறாள் நாயகி.

“விசாரிக்கும் போது எல்லாரையும் தானே கூப்பிடுவாங்க…” என்று இழுக்கும் ஸ்ரீயிடம்

“சரி தப்பு பண்ணினவுங்க மாட்ட போறாங்க… நமக்கென்ன விடு ” என பேச்சை முடிக்க நினைக்கும் நாயகியிடம்

“ஹலோ … உன்னையும் போலீஸ் விசாரிக்கும்.” தெனாவட்டாக சொல்லும் ஸ்ரீயிடம்

“என்னை எதுக்கு விசாரிக்கணும் நான் என்ன தப்பு பண்ணினேன்.” என்று கேட்கிறாள் நாயகி

“நீயும்  அவனும் இருக்குற போட்டோ அவனோட செல்லுல இருக்காம்” என்ற ஸ்ரீயிடம்

” Hello அந்த போட்டோ ஒரு ரெஸ்டாரன்ல சாப்பிடும் போது எடுத்தது அதுல எனக்கும் அவனுக்கும் அரையடி இடைவெளி இருக்கும். ஆமா அதை எடுத்ததே நீதானே அதை சொல்லலையா அவங்க கிட்ட…” கொஞ்சம் அதிர்ச்சியோடு கேட்கிறாள் நாயகி

“சொன்னேன்  அதுக்கு அவங்க சொல்றாங்க frd னா எதிரில் ஒக்காந்து சாப்புடுவாங்க பக்கத்திலா ஒக்காருவாங்கனு கேக்குறாங்க…” என்கிறாள் ஸ்ரீ.

“நடந்தது தான் உனக்கு தெரியுமே சொல்லவேண்டியது தானே ஸ்ரீ…” ஆதங்கத்தோடு கேட்கிறாள் நாயகி

“எதையும் கேக்குற மனநிலமைல இல்ல அவங்க போலீஸ் அதையெல்ல நம்பாது முதலில் குற்றவாளியா தான் பார்க்கும் நீ குழந்தை உனக்கு ஒன்னும் தெரியாதுன்னு என்னை பேசவிடாம பண்றாங்க…” சற்று வருத்தத்தோடு ஸ்ரீ சொல்ல
அந்த பெண்மணியின் உளறல்கள் கேட்டு சிரித்துக்கொண்டே நாயகி
“ஓகே  ஓகே போலீஸ் என்னை தானே விசாரிப்பாங்க பரவாயில்ல நான் பதில் சொல்லிக்கிறேன் அவங்களை டென்சன் ஆகவேண்டானு சொல்லு” என்கிறாள் நாயகி சாதாரணமாக நடக்க போகும் விபரீதம் தெரியாமல்..

(தொடர்ச்சி… வரும் சனிக்கிழமை..)