uma221

 

ந்த நிலையிலும் , யார் சொல்லியும் நாயகனின் மேல் இருந்த ஈர்ப்பு குறையவில்லை ஸ்ரீ க்கு.

நாயகியிடம் fake id பாஸ் வேர்டு வாங்கி நாயகனுடனான நட்பை தொடருகிறாள் ஸ்ரீ.
நாயகனிடம் இருந்து msg எப்பவும் போல சாதாரண விசாரிப்புக்கள் முடிந்ததும் நாயகிக்கு ஸ்ரீ சொன்னவிசயங்கள் நினைவுக்கு வர நாயகனிடம் Msg ல
” அந்த பத்மினிய block பண்ணிடு அதான் உனக்கு நல்லது ”
” ஏன் ”
” உன்னோட நல்லதுக்கு தானே சொல்றேன் ஏன் நான் எது சொன்னாலும் கேக்க மாட்டேங்குற ”
” கேக்குறேன் ஏன்னு காரணம் சொல்லு ”
msg பேசமுடியாமல் call பண்றா நாயகி.
” ஹலோ ”
” என்ன சொல்லு அவங்களை ஏன் block பண்ணனும் ?”
” அவங்க சொந்தகார பொண்ணுன்னு கூட பார்க்காம ஸ்ரீ அம்மா கிட்டையே பொண்ணையும் உன்னையும்… ” சொல்லமுடியாமல் நாயகி தடுமாற…
“ம்ம்… ஸ்ரீ சொல்லி feel பண்ணுச்சு. Sanjana San id யும் கண்டுபுடிச்சி போட்டுகொடுத்திருக்கு ”
” ஆமா பாவம் ஸ்ரீ ”
” நீ எப்போ அதை பார்க்க போவ ?” நாயகன் கேட்க..
” Evening போவேன் ஏன் கேக்குற ?”
” ஸ்ரீ கிட்ட பேசணும். போன் பண்ணி கொடு யாரும் இல்லேனா ”
” சரி ” இணைப்பை துண்டிகிறாள் நாயகி.
Evening ஸ்ரீ வீட்டிற்கு செல்லும் நாயகி
“Hai ”
” என்ன ஸ்ரீ நல்ல தூக்கமா !?”
” அதை தவிர என்ன வேலையிருக்கு !? நீ ?”
” இல்ல ஸ்ரீ கொஞ்சம் வெளிவேலையிருந்தது. ஸ்ரீ அவன் கிட்ட பேசினேன். ”
” என்ன சொல்லுச்சு ?”
” ஒன்னும் சொல்லல உங்க aundy விஷயம் சொன்னேன் நீ ஸ்ரீய பார்க்க போன்னா call பண்ணுனு சொல்லுச்சு ”
” ம்… call பண்ணுனு ”
நாயகனுக்கு call பண்றாள்.
” எங்க இருக்க ?”
” ஸ்ரீ வீட்ல ”
” அதுகிட்ட போன் கொடு ”
ஸ்ரீயிடம் போன் போக இருவரும் பேசியதும் இணைப்பை துண்டிகிறாள் ஸ்ரீ.
” என்னாச்சு ஸ்ரீ கட் பண்ணிட ”
” அது தான் கட் பண்ண சொல்லுச்சு ” கொஞ்சம் வித்தியாசமாக உணர்கிறாள் நாயகி எப்போது பேசினாலும் கடைசியில் நாயகியிடம் பேசிவிட்டு முடிக்கும் நாயகனின் செயல் இன்று மாறுபட்டிருப்பது கண்டு குழம்புகிறாள். ஒரு வேளை ஏதாவது வேலையிருக்கலாம் என்று சமாதானம் அடைகிறாள். ஆனால் நாயகியை அவாய்ட் பண்ணியதில் ஸ்ரீக்கு ரொம்ப சந்தோசம்.
” என்ன சொல்லுச்சு ஸ்ரீ ?”
” அதான் எங்க aundy பத்தி சொன்னேன் sanjana san idயும் இல்லாததால உன்னோட fake id ல தான் வருவேன்னு சொன்னேன் அதுக்கு என்ன மறுபடியும் திருட்டு id யானு கிண்டல் பண்ணுச்சு ” சொல்லிட்டு சிரிக்கிறாள் நாயகியும் சிரித்து கொண்டே
” உங்க aundy ய block பண்ணிடானாமா!?”
” நானும் அவங்கள முதலில் block பண்ணுன்னு சொன்னேன். அவனும் பண்ணிடுவேன் இன்னும் கொஞ்ச பேருக்கும் அவங்க என்னை பத்தி தப்பா சொல்லியிருக்காங்க ஏன்தான் இவங்களுக்கு இந்த வேலையோ தெரியல block பண்ணிடுவேன்னு சொல்லுச்சு ”
” இன்னும் கொஞ்ச பேரா !? ”
” ஆமாம் ப்பா யாரோ செந்தூர் பாலான்னு ஒரு பொண்ணாம் அதுக்கு msg பண்ணிருக்காங்க அந்த பொண்ணும் இவனுக்கு msg பண்ணி கேட்டிருக்கு ஏன் அவங்க அப்படி சொல்றாங்கன்னு அந்த பொண்ணு அண்ணான்னு தான் சொல்லுமாம் அது கிட்ட போய் தப்பா சொல்லியிருக்காங்க ஸ்ரீ சொல்ல நாயகி கோவப்படுகிறாள்.
” இதுக்கு வேற வேலையே இருக்காதா ? ஸ்ரீ ”
” விடு அதான் அவன் block பண்றேன்னு சொல்லிடானே ” இரண்டு நாட்கள் அமைதியாக நகருகிறது நாயகிக்கு அவ்வளவாக ஆன் லைனும் வரவில்லை. ஆனால் அந்த அமைதி ஒரு புயலின் ஆரம்பத்திற்கான அறிகுறியாகிறது.
பத்மினியை நாயகன் block பண்ண ஏன் என்று புரியாமல் ஸ்ரீயிடம் விசரிக்கிறாள் பத்மினி ஸ்ரீ யோ தன்னை காத்துக்கொள்ள நாயகியின் பெயரை சொல்லி தப்பித்து கொள்கிறாள். பத்மினியின் கோவம் நாயகி மேல் திரும்புகிறது. இன்னொரு பக்கம் நாயகியை அவாய்ட் பண்ணி தன்னிடம் பேசியதில் மகிழும் ஸ்ரீ நாயகனை தக்க வைத்துகொள்ள முடிவெடுக்கிறாள் ஸ்ரீ. உறவில் தாய் &  மகளாக இருந்தாலும் இருவரும் ஒருவனுக்கு முயற்சிக்கும் கேவலம் ஒருபுறம் என்றால் இருவரின் இந்த கேவலமான போட்டி உருவாக காரணமே நாயகனாய் இருப்பதும் சமுக அவலங்களின் உச்சம்.

 

(தொடரும்…)