கலக்ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவராக ராமதுரை நியமனம்

டெல்லி:

த்திய அரசின் கலாச்சாரத்துறையின் கீழ் கலாக்சேத்ரா அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளையின் தலைவராக ராமாதுரை நியமிக்கபட்டுள்ளார்.

டாடா கன்சல்டன்சி சர்விசஸ் நிறுவனத்தின் முன்னாள் துணை தலைவரான ராமதுரை, கலாக்சேத்ரா அறக்கட்டளை தலைவர் பொறுப்பில் அடுத்த ஐந்து ஆண்டுகள் இருப்பார்.

தேசிய திறன் மேம்பாட்டு கவுன்சில் குழுவில் பிரதமரின் ஆலோசகராக செயல்பட்டுள்ள ராமதுரை, தேசிய திறன்மேம்பட்டு கவுன்சில் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்த அறக்கட்டளையில் காலியாக உள்ள இடங்களை நிரம்பும் வகையில், கடந்த 18-ஆம் தேதி அனுபமா ஹோஸ்கெரே, நெய்வேலி சந்தனகோபாலன் மற்றும் சுதா ரகுநாதன் ஆகிய மூன்று கலைஞர்களை அரசு நியமனம் செய்தது. இதில் அனுபமா ஹோஸ்கெரே பாரத நாட்டியம் நடன கலைஞர். இவர் சௌம்யா சந்தனகோபாலன் என்பருக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார். டாக்டர் ரகுநாதன் கர்நாடக வாய்பாட்டு கலைஞர், இவர் கங்கி அமரனுக்கு பதிலாகவும், நெய்வேலி சந்தனகோபாலன், பால கோபாலனுக்கு பதிலாகவும் நியமிக்கப்பட்டனர்.