கல்லூரி மாணவி தற்கொலை மாணவர் கைது

 

மாவட்ட செய்திகள்

சேலம்: ராசிபுரம் அருகே தனியார் கல்லூரி பேருந்தில் பயணம் செய்த மாணவி அதிலிருந்து குதித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அதே கல்லூரியில் பயிலும் மாணவரை போலீஸார் கைது செய்தனர்.

kills one
சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.ஏ. படித்து வந்த ஆத்தூரை  அடுத்த கீரிப்பட்டியைச் சேர்ந்தவர் பிரியதர்ஷிணி (22).  கல்லூரிப் பேருந்தில் தினமும் கல்லூரிக்குச் சென்று வந்தார்.

கடந்த திங்கள்கிழமை  பிரியதர்ஷிணி கல்லூரிக்குப் புறப்பட்டார். நாமக்கல் மாவட்டம், மங்களபுரம் ஈஸ்வரமூர்த்திபாளையம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது அதிலிருந்து பிரியதர்ஷிணி குதித்தார்.  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மங்களபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். மாணவி எழுதிய 5 பக்கக் கடிதம் ஒன்று விசாரணையில் போலீஸாரிடம் சிக்கியது.

கடிதத்தில், அதே கல்லூரியில் பயிலும் இளைஞர் ஒருவரை தான் காதலித்ததாகவும், ஆனால்  காதலன் தன்னை கைவிட்டதால், தற்கொலை செய்து கொள்வதாகவும் எழுதியுள்ளார்.  இதன் காரணமாக சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பகுதியைச் சேர்ந்த எம்சிஏ., மாணவர் அரவிந்த் கைது செய்யப்பட்டார்.