கல்விக்கூடங்கள், வழிபாட்டு தளங்கள், மருத்துவமனைகள்: டாஸ்மாக் கடைகளை மூட அரசு முடிவு

சென்னை :

மிழகம் முழுவதும் இரண்டாம் கட்டமாக டாஸ்மாக் கடைகள் மூடுவது பற்றி கணக்கெடுப்பு நடந்து வருகிறது.

அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, முதல்வர் ஜெயலலிதா முதல்கட்டமாக 500 மதுக்கடைகள் மூட நடவடிக்கை எடுத்தார். அதுபோல் டாஸ்மாக் கடை திறந்திருக்கும் நேரமும் குறைக்கப்பட்டது. தற்போது இரண்டாம் கட்டமாக மேலும் கடைகளை மூட அரசு முடிவெடுத்து உள்ளது.

Tasmac-tanjore-students

தமிழகம் முழுவதும் தற்போது 6,300 டாஸ்மாக் ம கடைகள் இயங்கி வருகிறது. அடுத்தக் கட்டமாக பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், கோவில், சர்ச், மசூதி போனற் இடங்களின் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூடுவதற்காக அதன் விவரங்களை சேகரிக்கும் பணி நடைபெற தொடங்கி உள்ளது.

 

இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது. இவர்களின் அறிக்கையை பொறுத்தே தமிழக அரசு இரண்டாவது கட்டமாக மூடும் டாஸ்மாக் கடைகள் பற்றிய விவரங்களை வெளியிடும் என தெரிகிறது.

சென்னை பட்டினம்பாக்கத்தில் தற்போது பிரச்சினையாகி, போராட்டம் நடைபெறும்  டாஸ்மாக் கடையும் இத்துடன் சேர்த்து மூடப்படும் என்று தெரிகிறது.