கள்ளக்குறிச்சியில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கள்ளக்குறிச்சி:

ள்ளக்குறிச்சியில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சியில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 89-ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 34 பேர் பெண்கள், அதில் 12-க்கும் ஏற்பட்டோர் கர்ப்பிணிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கோயம்பேடு சந்தைக்கு சென்று திரும்பியவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், சில தளர்வுகளை அரசு அறிவித்தது. ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் மளிகை கடைகள், காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கள்ளக்குறிச்சி நகரில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பூட்டிக்கிடந்த கடைகள் நேற்று காலை திறக்கப்பட்டன. இதனால் முக்கிய சாலைகளில் பொருட்கள் வாங்க கூட்டம் அலைமோதியது. மேலும் ஒரே நேரத்தில் பொதுமக்கள் வாகனங்களில் திரண்டு வந்ததால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் ஊரடங்கு முற்றிலும் தளர்வு செய்யப்பட்டதுபோல் நகரம் காட்சி அளித்தது. இதை பார்த்த போலீசார், போக்குவரத்து நெரிசலை சரிசெய்து வாகனங்களை நான்குமுனை சந்திப்பு கைகாட்டி சிக்னல் வழியாக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.