கள்ளச்சாராய வேட்டையில் இறங்கிய இளம் தலைவர்கள் : காவல்துறை விமர்சனம்

கமதாபாத்

காங்கிரஸ் எம் எல் ஏ அல்பேஷ் தாகூர், ஜிக்னேஷ் மேவானி மற்றும் படேல் இன தலைவர் ஹர்திக் படேல் ஆகியோர் கள்ளச்சாராய வேட்டை நடத்தியதை காவலர்கள் விமர்சித்துள்ளனர்.

 

குஜராத் மாநிலத்தில் மது விலக்கு முழுமையாக அமுலில் உள்ளது.   ஆயினும் கள்ளசாராய விற்பனையும் அதிக அளவில் உள்ளது.    அகமதாபாத் நகரில் உள்ள சோலா என்னும் பகுதியில் கடந்த புதன் கிழமை அன்று கள்ளசாராயாம் அருந்தியதால் நான்கு பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களில் இருவர் கவலைக்கிடமாக உள்ளனர்.

இவர்களை மருத்துவமனையில் சென்று காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் அல்பேஷ் தாகூர், சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி மற்றும் படேல் இன தலைவர் ஹர்திக் படேல் ஆகியோர் நலம் விசாரித்தனர்.   அப்போது அவர்கள் அளித்த தகவலின் படி இந்த இளம் தலைவர்கள் கள்ளச்சாராய வேட்டை நடத்தி உள்ளனர்.

அப்போது அல்பேஷ் தாகூர் தாம் ஏற்கனவே கள்ளச்சாராயம் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவித்ததாகவும் ஆனால் தாங்கள் கள்ளச்சாராய வேட்டை நடத்திய இடம் மாநில காவல்துறை அதிகாரியின் அலுவலகத்துக்கு மிக அருகில் இருப்பதாகவும் கூறினார்.  அத்துடன் அகமதாபாத் நகரில் நடமாடும் கள்ளச் சாராயத்தை ஒழிக்கவாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாம் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்துள்ளார்.

இதற்கு காவல்துறை அதிகாரி ஒருவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.  அவர், “சூரத் மற்றும் ராஜ் கோட் நகரங்கள் உட்பட மாநிலம் முழுவதும் அவ்வப்போது சோதனை நடைபெறுகிறது.  இதுவரை அகமாதாபாத் நகரில் 2000 லிட்டர் கள்ளச்சாராயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  எனவே இந்த மூவரும் சொல்வது தவறானது.   இவர்கள் இவ்வாறு சோதனை நடத்துவது ஒரு அரசியல் ஸ்டண்ட் என்பதே உண்மை” என தெரிவித்துள்ளார்.

You may have missed