கள்ளன் படப்பிடிப்பு துவங்கியது
எழுத்தாளர் சந்திரா முதன் முதலாக இயக்கும் கள்ளன் படப்பிடிப்பு கேரளாவின் கொச்சியில் துவங்கியவது. நாயகனாக இயக்குநர் கரு.பழனியப்பன் நடிக்கிறார். முதல் நாள் படப்பிடிப்பை தயாரிப்பாளர் வி.மதியழகன், கேமராவை முடுக்கி தொடங்கி வைத்தார்.
புது டில்லியைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான நிகிதா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
மேலும் நமோ நாராயணன், சௌந்தர்ராஜா ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொச்சியைத் தொடர்ந்து தேனி, போடிமெட்டு பகுதிகளில் நாற்பத்து ஐந்து நாட்கள் ஒரே கட்டமாக நடக்க இருக்கிறது.