கவிதை: எரிவாயுக்குழாய் மீதிருந்தும் மீத்தேன் படுகையிருந்தும் ஒரு விவசாயியின் விண்ணப்பம்…

1010533_685062488191070_1817963528_n

நடனங்களின் முடிவில்
பாராட்டப்படுகிறாள்
அல்லது ஆசீர்வதிக்கப்படுகிறாள்
நடன தாரகை

தூரிகையோட்டத்தின் போதே
வியப்புக்குள்ளாக்கி இறுதியில்
தலைவணங்கச் செய்கிறான்
ஓவியன்

காலம் தெரியாத காலத்தில்
கலை செய்த சிற்பிகள்
கலாச்சார பெருமையின்
அடிநாதமாகிவிட்டனர்
பெயர் தெரியாவிடினும்

விதை விதைத்து
உயிர் வளர்ப்பார் யாரும்
கலைஞனில்லையென்றாலும்
காலம் தாழ்த்தாமல்
மனிதனென்றாவது கொள்ளுங்கள்..

– பல்லடம் ராசு

Leave a Reply

Your email address will not be published.