காகத்தை உண்ணும் மலைப்பாம்பு : வைரலாகும் வீடியோ

நியூ சவுத் வேல்ஸ், ஆஸ்திரேலியா

ரு வீட்டுக் கூறை மீது ஒரு மலைப்பாம்பு காகத்தை பிடித்து உண்ணும் வீடியோ வைரலாகி வருகிறது.

காகங்கள் தங்கள் கூடுகளில் இடும் முட்டைகளை பாம்புகள் திருடி உண்பதாக கூறுவதுண்டு. இதைப் பற்றிய சிறுவர் கதையும் உண்டு. ஆனால் காகத்தையே பாம்பு உண்ணும் என்பது இதுவரை கேள்விப்படாத ஒன்றாகும். இந்த அதிசயம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணின் வீட்டு கூறை மீது ஒரு காகம் அமர்ந்திருந்தது. அப்போது அந்தப் பெண்ணின் வீட்டு கூறையில் டிவி ஆண்டெனாவில் இருந்து ஒரு மலைப்பாம்பு அந்த காகத்தை பிடித்துள்ளது. அதை ஒட்டி அவர் கூச்சலிட்டுள்ளார். அந்த பாம்பு காகத்தை ஒன்றரை மணி நேரத்தில் முழுவதுமாக விழுங்கி உள்ளது.

அங்கு கூடிய கூட்டத்தில் ஒருவர் இந்த நிகழ்வை வீடியோ ஆக்கி உள்ளார். அந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த பெண் இந்த நிகழ்வால்  பயந்து போய் உள்ளூர் பாம்பு பிடாரன்களை அழைத்து பாம்பை பிடிக்க சொல்லி உள்ளார். ஆனால் அவர்கள் அந்த பாம்பை பிடிக்க மறுத்துள்ளதாகவும் தற்போது வந்துள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.