காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரபேல் வழக்கை விசாரிப்போம் : ராகுல் காந்தி

புதுடெல்லி:

தன் மீது தாக்குதல் நடத்தும் எதிர்கட்சிகளிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேடுக்கு ஜன.11 ம் தேதி ராகுல் காந்தி செல்கிறார். இதனையடுத்து அவரை கல்ஃப் டைம்ஸ் பத்திரிக்கை பேட்டி அளித்த அவர், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ரபேல் விமான பேரம் குறித்து விசாரிப்போம். என் எதிரிகள் என்னை தாக்குவதை வரவேற்கின்றேன்.

இதன்மூலம் அவர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன்.
ஜிஎஸ்டி அமல்படுத்திய பிறகு வியாபாரிகளின் முதுகெலும்பு உடைக்கப்பட்டுள்ளது. ஒன்றரை கோடி பேர் வேலை இழந்துள்ளனர் என்றார்.