காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மீனவர் நலனுக்கு தனி அமைச்சகம் : ராகுல் வாக்குறுதி

திருச்சூர்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மீனவர் நலனுக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.   நாடெங்கும் தொடர்ந்து சுற்றுப்பயணம் நடத்தி வரும் ராகுல் காந்தி பல பேரணிகள் மற்றும் கூட்டங்களில் கலந்துக் கொள்கிறார்.

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள திருப்பிரியார் என்னும் இடத்தில் அகில இந்திய மீனவர் காங்கிரஸ் நடத்திய தேசிய மீனவர் சபை கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

காங்கிரஸ் தலைவ்ர் ராகுல் காந்தி தனது உரையில், ”நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் மத்திய அரசில் மீன்வர் நலனுக்கு என தனி அமைச்சகம் அமைக்கப்படும்.    இது உறுதி.

நான் மோடியைப் போல் பொய் சொல்பவன் இல்லை.   நான் போலி வாக்குறுதிகளை அளிக்க மாட்டேன்.   எனது உரையை நன்கு கவனியுங்கள்.  என்னால் செய்ய முடிந்தவைகளை  பற்றி மட்டுமே நான் பேசுவேன்” என தெரிவித்துள்ளார்.