காசி : நடைமேடை அமைக்க நகர மக்கள் எதிர்ப்பு

காசி

காசியில் விஸ்வநாதர் கோவிலில் இருந்து கங்கை நதிவரை நடைமேடை அமைக்கும் திட்டத்துக்கு நகர மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்துக்களின் புனித நகரம் காசி,   இந்த நகரில் பல கோவில்கள் உள்ள போதிலும் காசி விஸ்வநாதர் கோவில் மிகவும் புகழ் வாய்ந்தது ஆகும்.   அத்துடன் இங்கு ஓடும் கங்கை நதியில் குளித்து விட்டு விஸ்வநாதரை தர்சிப்பது பெரும்பாலான இந்துக்களின் விருப்பம் ஆகும்.   இவ்வாறு தரிசனம் செய்ய வசதியாக கங்கைக் கரையில் இருந்து கோவில் வரை நடைமேடை அமைக்க உத்திரப் பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது.

சுமார் ரூ.450 கோடி செலவில் 400 மீட்டர் தூரமுள்ள நடைமேடை அமைக்கப்பட உள்ளது.  அதற்கான முதல் கட்ட பணிகள் தொடங்கி உள்ளன.    இந்த நடைமேடை அமைக்கும் போது சுமார் 160 வீடுகளும் ஒரு சில வரலாற்றுப் புகழ் மிக்க மற்றும் புராண சிறப்பு மிக்க சிறு கோயில்களும் இடிகப்பட உள்ளன.   இதனால் காசி நகர மக்கள் இடையே கடும் எதிர்ப்பு உண்டாகி உள்ளது.

இந்த கோவிலுக்கு அருகில் வசித்து வரும் மூத்த பத்திரிகையளர் பதம்பதி ஷர்மா நகர மக்களின் சார்பில் ஒரு முகநூல் பதிவு இட்டுள்ளார்.  அதில் அவர், “அவுரங்கசீப்பும், பாபரும் செய்யாததை ஆதித்யநாத் செய்துள்ளார்.   முகலாய ஆட்சியில் இது போல பல கோயில்கள் இடிக்கப்பட்டன.   ஆனால் அவைகள் மற்றொரு வழிபாடுத்தலம் ஆக்கப்பட்டன.  ஆனால் நடைமேடைக்காக இங்கு பாஜக அரசு கோயில்களை இடிக்கின்றன.

இது காசிநகரம் விளையாட்டு அரங்கம் இல்லை.  குஜராத்துக்கு சபர்மதி போல லக்னோவுக்கு கோமதி போல காசிக்கு கங்கை ஆறு உள்ளது.    இந்த நதிக்கரை கோயில்களை இடிக்க அனுமதிக்க மாட்டோம்: என பதிந்துள்ளார்.   அத்துடன் சர்மாவும் இந்தப் பகுதி வாழ் மக்களும் இணைந்து காசியின் புனித்தத்தை காப்போம் என்னும் இயக்கம் தொடங்கி போராடி வருகின்றனர்.   இந்த போராட்டத்துக்கு காசி வாழ் மக்களும் ஆதரவு அளித்துள்ளனர்.