‘காட்ஃபாதர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி….!

ஒளிப்பதிவாளரும், இயக்குனரும், நடிகருமான நட்ராஜ் நடிப்பில் உருவாகி வரும் ‘காட்ஃபாதர்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி நேற்று வெளியிட்டுள்ளார்.

இந்தப் படம் கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படம். இந்தப் படத்தை ஜெகன் ராஜசேகர் எழுதி இயக்குகிறார். விரைவில் இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் இசை விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தன் ட்விட்டரில் நேற்று வெளியிட்டார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது.

கார்ட்டூன் கேலரி