காட்டு யானைகள் தாக்கி வீடுகள் சேதம்

மாவட்ட செய்திகள்

கோவை:  கோவை மாவட்டம், நரசிம்மநாயக்கன்பாளையத்தை அடுத்த பூச்சியூர் குடியிருப்பு பகுதிக்குள்  காட்டு யானைகள் கூட்டம் நுழைந்து வீடுகளை சேதப்படுத்தியது.

elephants-gb

புச்சியூர் மாரியம்மன் கோவில் பகுதியில் நள்ளிரவு  நுழைந்த 14 காட்டு யானைகள் கொண்ட கூட்டம் அங்கிருந்த  வீடுகளின் கதவு மற்றும் ஜன்னல்களை உடைத்து சூறையாடியது.  வீட்டில் இருந்த அரிசி மூட்டைகளை வெளியே எடுத்து தின்றுள்ளது.

அங்கிருந்த தென்னை மற்றும் மா மரங்களை உடைத்தும், முறித்தும் குடிநீர் குழாய்களை உடைத்தும் சேதப்படுத்தியுள்ளது. சத்தம் கேட்டும் வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து சத்தம் போட்டு விரட்ட முயன்றனர். ஆனாலும் யானைகள் கூட்டம் அந்த இடத்தைவிட்டு அகலவில்லை. வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்கள் உயிர் பயத்தோடு கூப்பாடு போட்டுள்ளனர். . இதையடுத்து பக்கத்தில் குடியிருப்பவர்கள்  பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல்  கொடுத்தனர்.

வனத்துறையினர் வந்து பட்டாசுகளை வெடித்தும் சுமார் 1 மணி நேரம் போராடி யானைகள் கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.