apple
ஆப்பிள் நிறுவனத்தைப் பற்றி அதிகம் கூறவே தேவையில்லை. ஸ்டீவ் ஜாப்ஸ் தொடங்கிய அன் நிறுவனம் ஐபோன், ஐபாட், ஐமாக் போன்ற பல தொழில்நுட்ப பொருட்களை தயாரித்து விற்பனை செய்கிறது. 2012 ல் டெக்சாஸ் மாகாணத்தில், விர்நெட் எக்ஸ் என்ற நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தின் மீது இரு காப்புரிமை வழக்குகள் தொடங்கியது.
அந்த இரு வழக்குகளிலும், தீர்ப்பு ஆப்பிள்ளுக்கு சாதகமாக அமையவில்லை. ஒரு வழக்கில் நீதிபதிகள், ஆப்பிள் நிறுவனத்தை VPN சாப்ட்வேர் காப்புரிமை விதிமீரளின்படி விர்நெட் எக்ஸ் நிறுவனத்திற்கு 335 மில்லியன் டாலர்ஸ் கொடுக்க உத்தரவிட்டுள்ளது; மற்றொரு வழக்கில், ஆப்பிள் நிறுவனத்தை Facetime சாப்ட்வேர் காப்புரிமை விதிமீரளின்படி விர்நெட் எக்ஸ் நிறுவனத்திற்கு 290 மில்லியன் டாலர்ஸ் கொடுக்க உத்தரவிட்டுள்ளது.
இதைப்பற்றி ஆப்பிள் நிறுவத்தைக் கேட்ட போது, “இத்தகைய தீர்ப்பு எங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. இதை நாங்கள் எதிர்பார்க்கவும் இல்லை. கண்டிப்பாக மேல்முறையீடு செய்து நாங்கள் கலங்கமற்றவர்கலென்று நிரூபிப்போம்”.
-ஆதித்யா