காலை செய்திகள்

 • பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற தெரீசா மே, முன்னாள் பிரதமர் டேவிட் கேமரனின் ஆதரவாளர்கள் பலரை நீக்கி தனது அமைச்சரவை மாற்றத்தை நிறைவு செய்துள்ளார்.
 • தெரீசா மே-வை வரவேற்கும் பிரதமர் இல்ல ஊழியர்கள்
  தெரீசா மே-வை வரவேற்கும் பிரதமர் இல்ல ஊழியர்கள்
 • கூகுள் தனது நிறுவனத்தின் விளம்பர வர்த்தகத்தை சேர்க்க ஐரோப்பிய ஒன்றியத்தின் போட்டி விதிகளை மீறுகிறதா என்று அந் நிறுவனத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் தனது விசாரணையை விரிவுப்படுத்தியுள்ளது.
 • பிரிட்டனுக்கான விமான சேவையைக் குறைக்கிறது டெல்டா ஏர்
 • இந்திய குடியரசுத் தலைவரின் அதிகாரபூர்வ இல்லத்தின் ( ராஷ்ட்ரபதி பவன்) அரிய காட்சிகளை சமூக ஊடகப் பயன்பாட்டாளர்களுக்கு எழுத்தாளர் அமிதாவ் கோஷ் தந்துள்ளார்.
 • முதல்வர் நபாம் துகி, 16-ம் தேதி சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
 • 2 குழந்தைகளுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் மர்மமான முறையில் இறந்துள்ளார். கொலையாளி யார் என்று தெரியாமல் காவல்துறையினர் குழப்பமடைந்துள்ளனர். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கோனேரிப்பட்டி
 • காதலன் திட்டியதால் சட்டக்கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்…பொறியியல் மாணவர் கைது. கார்த்திகா சித்தி (22) திருவேற்காடு வேலப்பன் சாவடியில் உள்ள சவீதா பல் மருத்துவ பல்கலைக்கழகத்தில் உள்ள சட்டக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
 • கடற்கரை கலங்கரை விளக்கம் அருகே 114 கிலோவில் காமராஜர் உருவத்தில் ராட்சத கொழுக்கட்டை செய்ய உள்ளனர்.
 • சென்னை மந்தைவெளியில் குப்பைத்தொட்டியில் மான்தோல் கண்டெடுக்கப்பட்டுள்ளது
 • அமெரிக்க கிம்பர்லி கிளார்க் நிறுவனத்தின் தொழிற்சாலையை அரசே ஏற்றுக் கொண்டுள்ள வெனிசுலா அரசு, அந்த தொழிற்சாலையை தொழிலாளர்கள் வசமே ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவித்திருக்கிறது
 • கருப்பு பணத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில், சிறப்பு புலனாய்வு குழுவை மத்திய அரசு அமைத்தது. ஓய்வு பெற்ற நீதிபதி எம்.பி.ஷா தலைமையிலான இக்குழு, கருப்பு பணத்தை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றிய தனது 5–வது அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது.
 • அதில், கணக்கில் காட்டப்படாத பணம், ரொக்கமாக பதுக்கி வைத்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு முடிவு கட்ட, பல்வேறு நாடுகளில் உள்ள சட்டங்கள், கோர்ட்டுகள் தெரிவித்த கருத்துகள் அடிப்படையில், ரொக்க பரிவர்த்தனைக்கு உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்று கருதுகிறோம்.
 • அந்தவகையில், ரூ.3 லட்சத்துக்கு மேற்பட்ட ரொக்க பரிவர்த்தனைக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும். அத்தகைய ரொக்க பரிவர்த்தனை சட்டவிரோதமானது மற்றும் சட்டப்படி தண்டனைக்குரியது என்று சட்டம் கொண்டுவர வேண்டும்.
 • நாட்டில் அவ்வப்போது பெருமளவு கருப்பு பணம் கைப்பற்றப்பட்டு வருவதை பார்க்கும்போது, கைஇருப்பு ரொக்கத்துக்கு உச்சவரம்பு நிர்ணயித்தால்தான், ரொக்க பரிவர்த்தனைக்கு தடை விதிப்பதை வெற்றிகரமாக அமல்படுத்த முடியும்.
 • எனவே, ரூ.15 லட்சத்துக்கு மேல் கைஇருப்பில் வைத்திருக்க தடை விதிக்க வேண்டும். அதற்கு மேற்பட்ட தொகையை தனிநபரோ, கம்பெனியோ வைத்திருக்க விரும்பினால், அவர்களது பகுதிக்கான வருமான வரி ஆணையரிடம் தேவையான முன்அனுமதியை பெற வேண்டும். இவ்வாறு அந்த சிபாரிசுகளில் கூறப்பட்டுள்ளது.
 • தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவன தலைவர் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சுபாஷ் பண்ணையாளர் உள்ளிட்ட 9 பேர் திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகினர்
 • மருத்துவ படிப்புக்கு இந்த ஆண்டு பொது நுழைவுத்தேர்வு கிடையாது ‘மத்திய அரசு பிறப்பித்த அவசர சட்டத்துக்கு தடை இல்லை’ சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
 • பதவி பேராசையால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை மோடி அரசு கவிழ்க்கிறது நாந்தெட் பொதுக்கூட்டத்தில் சோனியா காந்தி ஆவேசம்
 • கற்பழிப்பு குறித்து சர்ச்சை கருத்து பெண்கள் ஆணையம் முன் ஆஜர் ஆக சல்மான்கான் மறுப்பு கடிதம் அனுப்பினார்
 • சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியுடன் தமிழக வழக்கறிஞர்கள் சந்திப்பு போராட்டம் குறித்து ஆலோசனை
 • துணை தேர்தல் கமிஷனராக விஜய் குமார் தேவ் நியமனம் சி.பி.எஸ்.இ. புதிய தலைவராக ராகேஷ் குமார் சதுர்வேதி
 • பிரான்ஸில் ஆண்டுதோறும் ஜூலை 14-ம் தேதி பாஸ்டில் நாள் கொண்டாடப்படுகிறது. பாஸ்டில் எனப்படும் தேசிய தினத்தை தேசிய தினத்தை மக்கள் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.அப்போது நைஸ் மாகாணத்தின் முக்கிய சாலையில் சென்று கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று திடீரென, ஒரமாக நின்று கொண்டிருந்த மக்கள் மீது மோதிச் சென்றது. சாலையோரமாக சுமார் 2 கிலோமீட்டர் தூரம் அந்த வாகனம் சென்றது. இதில் ஏராளமான மக்கள் சிக்கி நசுங்கினர்.
 • அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கிர்திஷ் படேல் அவரது மனைவி நிட்டா படேல் ஆகிய இருவரும் மருத்துவ பரிசோதனைக்கூடம் நடத்தி வந்தனர். உரிய மருத்துவ உரிமம் பெறாமல் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கூடம் நடத்தி வந்ததோடு, போலியான மருத்துவ அறிக்கைகளை தயாரித்து அதன் மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த அமெரிக்க கோர்ட்டு அவர்களுக்கு75 மில்லியன் டாலர் (சுமார் ரூ.50 கோடி) அபராதம் விதித்து உத்தரவிட்டது.
 • ‘சர்வதேச விதிமுறைகளை மீறுவது இடையூறை ஏற்படுத்தும்’ சீனாவுக்கு, அமெரிக்கா எச்சரிக்கை
 • இந்திய தேயிலை நிறுவனம் ஒன்று புகழ் பெற்ற அசாம் கிரீன் டீ தூள் அடங்கிய 6 ஆயிரம் பேக்குகளை அமெரிக்காவின் குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளரான டொனால்டு டிரம்பிற்கு அனுப்பியதுடன் உங்களை தூய்மைப்படுத்தி கொள்வதற்கு ஒன்றும் காலம் கடந்துவிடவில்லை என்ற தகவலையும் அனுப்பியுள்ளது.
 • நீண்ட தூரம் செல்லும் ரெயில் பயணிகள் வசதிக்காக 6 மாதம் வரை கெட்டுப்போகாத வகையிலான உணவை சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
 • சூடானில் சிக்கித் தவித்த இந்தியர்கள் மீட்பு: திருவனந்தபுரம் வந்தடைந்தனர்
 • சென்னையில் ஐஸ்ஹவுஸ் பகுதியில் 5 கிலோ கேட்டமைன் போதை பொருள் பறிமுதல்
 • அருணாச்சலப்பிரதேச முதல்வர் நபாம் துகி அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்று நண்பகல் 12 மணிக்கு அருணாச்சலப்பிரதேச அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
 • பிரான்ஸில் தீவிரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கண்டனம்
 • உத்தரகண்ட் மாநிலத்தில் கனமழை: நெடுஞ்சாலை மூடப்பட்டதால் மக்கள் தவிப்பு
 • பிரான்ஸில் தீவிரவாதத் தாக்குதலை அடுத்து அவசர நிலை பிரகடனம்: அதிபர்
 • பீகாரில் உள்ள நீமா ஹால்ட் அருகே ரயிலுக்காக காத்துக் கொண்டிருந்த மக்கள் மீது தலைக்கு மேல் உள்ள கம்பி அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
 • பிரான்ஸ் தீவிரவாத தாக்குதல் சம்பவம்: ஒபாமா கண்டனம்
 • விவசாயிகளுக்காக நரேந்திர மோடியால் துவக்கப்பட்ட கிசான் டிவி சேனலில் ஆலோசகர் என்ற முக்கிய பொறுப்பில் இருந்தவர் நரேஷ் சிரோகி. இந்நிலையில் அவர் ஆலோசகர் உள்பட பிரசாரர் பாரதியில் வகித்து வந்த அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை பிரசார் பாரதி பிறப்பித்துள்ளது.
 • சிபிஎஸ்இ அமைப்பின் தலைவர் பதவி கடந்த 2014ம் ஆண்டு முதல் காலியாக இருந்து வருகிறது. இந்நிலையில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக ஸ்மிருதி இரானி இருந்தபோது சர்வேந்திர விக்ரம் சிங் பெயரை பரிந்துரை செய்திருந்தார். இந்நிலையில், பிரதமர் தலைமையிலான நியமனக் குழுவின் கூட்டம் ேநற்று நடந்தது. அதில் விக்ரம் சிங் பரிந்துரை நிராகரிப்பட்டது. அவருக்கு பதில், மத்திய பிரதேசத்தை ேசர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ராகேஷ்குமார் சதுர்வேதியை, சிபிஎஸ்இ தலைவராக மத்திய அரசு நியமித்துள்ளது.
 • கேரள பாஜ செயலாளருக்கு கொலை மிரட்டல்
 • காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விசை படகுகள் நிறுத்தும் வார்ப்பு பகுதியில் நேற்று காலை 40 வயது மதிக்கத்தக்க அழுகிய நிலையில் இருந்த ஆண் சடலம் மிதந்தது. இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் காசிமேடு துறைமுக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு சடலத்தை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், இறந்தவர் யார்? கடலில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது யாரேனும் கொலை செய்து கடலில் வீசினார்களா ஆகிய கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 • பிரான்ஸ் டிரக் தாக்குதலில் இந்தியர்களுக்கு பாதிப்பில்லை: மத்திய அரசு
 • கோவில்பட்டிஅருகே ரயில் சேவை பாதிப்பு
 • துபாயில் 64 டிகிரி செல்சியஸ் வெப்பம் போன்ற உணர்வு நிகழும்
 • அத்தியாவசிய பொருட்கள் சப்ளை: ஜம்முகாஷ்மீர் அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
 • தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதியில் அமைந்துள்ள வெண்ணார் படுகையில் நீர்ப் பாசனத்தை வலுப்படுத்தவும், வடிகால் அமைப்பு மற்றும் தண்ணீர் மேலாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்காகவும் 668 கோடியே 70 லட்சம் ரூபாய்க்கான கடன் ஒப்பந்தத்தை இந்திய அரசும் ஆசிய வளர்ச்சி வங்கியும் செய்துள்ளன.
 • சொத்து விபரங்களை தெரிவிக்காத, தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில், வங்கிகள் கூட்டமைப்பு, கோர்ட் அவமதிப்பு மனு தாக்கல் செய்துள்ளது.
 • காஷ்மீர் விவகாரத்தில் தனது கட்சியின் தனித்தன்மையை காண்பிக்க மெகா பேரணி நடத்த உள்ளார் மறைந்த பாக். முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ மகன் பிலாவல் பூட்டோ.
 • பட வெளியீட்டையே திருவிழாவாக மாற்றுபவர் ரஜினி ஒருவர்தான்! – லைகா ராஜு மகாலிங்கம்

Leave a Reply

Your email address will not be published.