Warning: sprintf(): Too few arguments in /mnt/stor14-wc1-dfw3/www.patrikai.com/web/content/wp-content/themes/covernews/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

கிரண் பேடியின் கைகளை கட்டிய மத்திய அரசு

--

புதுச்சேரி

புதுவை ஆளுநர் கிரண் பேடியின் பொருளாதார பொறுப்புக்களை தலைமை செயலாளருக்கு மத்திய அரசின் உள்துறை மாற்றி உள்ளது.

புதுவை ஆளுநரான கிரண் பேடிக்கும் ஆளும் காங்கிரஸ் அமைச்சரவைக்கும் இடையில்  பனிப்போர் நிகழ்ந்து வருவது அனைவரும் அறிந்ததே.   இது குறித்து பல முறை புதுவை முதல்வர் வெளிப்படையாக புகார் தெரிவித்துள்ளார்.   ஆயினும் கிரண் பேடி தொடர்ந்து தன்னிச்சையாக முடிவு எடுத்தபடி உள்ளார்.

சமீபத்தில் கிரண் பேடி தனக்குள்ள பொருளாதார பொறுப்புக்களின் காரணமாக பல நிதி உதவிகளை நிறுத்தி வைத்துள்ளதாகவும் அதனால் அரசின் முக்கியமான பல செலவுகள் செய்ய முடியாத நிலை உள்ளதாகவும் புதுவை முதல்வர் தெரிவித்துள்ளார்.   இது குறித்து புதுவை அமைச்சரவை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் புகார்கள் அனுப்பி உள்ளன.

இந்நிலையில் மத்திய உள்துறை செயலர் புதுவை தலைமை செயலருக்கு ஒரு தகவல் அனுப்பி உள்ளார்.   அதில், “புதுவை நிகர் நிலை ஆளுனர் கிரண் பேடி நிர்வகித்த பொருளாதார பொறுப்புக்கள் விலக்கிக் கொள்ளப்படுகின்றன.  அவைகளை இனி தலைமை செயலர் கவனித்துக் கொள்வார்.  அரசு பணிகள் நல்ல முறையில் நடைபெறவும், அரசு தடையின்றி இயங்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் முதல்வர் நாராயண சாமியின் அனைத்து திட்டங்களையும் முடக்கி வந்த ஆளுநர் கிரண் பேடியின் கைகளை மத்திய அரசு கட்டிப்போட்டு விட்டதாக கருத்து தெரிவித்துள்ளனர்.