prakash-raj

சினிமாில் பரோபகாரியாய் நடித்து, “கண்ணா.. காசு இன்னிக்கு வரும் நாளைக்கு போவும்” என்று பஞ்ச் டயலாக் பேசும் நடிகர்கள், நிஜத்தில் வெறுங்கையால் கூட ஈ ஓட்டமாட்டார்கள்.

ஆனால் பெரும்பாலும் வில்லனாகவே நடித்த பிரகாஷ்ராஜ், நிஜத்தில் ஹீரோவாக உயர்ந்து நிற்கிறார்.

தெலங்கானா மாநிலத்தில் உள்ள, கொண்டாரெட்டிப்பள்ளி என்ற  மிகவும் பின் தங்கிய கிராமத்தைத் தத்தெடுத்து, அந்த கிராமத்துக்கு  வேண்டிய அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து தர இருக்கிறார்.   தெலங்கானா மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே.டி.ராமா ராவை சந்தித்து அனுமதியும் கோரியிருக்கிறார்.

பிரகாஷ்ராஜிடம் பேசினோம். அவர், “நான் எதிர்பார்த்ததை விட நிறைய பணம், நிறைய புகழ் கிடைச்சுருக்கு. இதையெல்லாம் வச்சுகிட்டு என்ன செய்யப்போறேன்…  அதனாலதான் என்னோட பணமும் புகழும் நாலு பேருக்கு உதவட்டுமே என்று அந்த கிராமத்தை தத்தெடுக்க முடிவு செய்தேன்” என்கிறார்.

“குறிப்பாக அந்த கிராமத்தை ஏன் தத்தெடுக் முடிவு செய்தீர்கள்” என்றோம்.

“. அதுக்கு ஏதும் முத்திரை குத்திடாதீங்க. நான் பிறந்தது கர்நாடகா, வளரந்தது தமிழ்நாடு. அப்புறம் தெலுங்கு, இந்தின்னு சுத்திட்டு இருக்கேன். தத்தெடுத்திருக்கிற கிரமம் தெலுங்கானாவில இருக்கு.. ஸோ.. தனிப்பட்ட காரணம் ஏதுமில்லை…  ஒரு படப்பிடிப்புக்கு அந்த கிராமத்தின் வழியாக செல்லும்போதுதான் பார்த்தேன். ரொம்ப பின்தங்கிய கிராமம். ஏதோ டக்குனு தோணு்சசு.. அப்பவேமுடிவெடுத்துட்டேன்.. மத்தபடி வேறு காரணம்  இல்லை.” என்று சிரிக்கிறார்.

நல்ல மனம் வாழ்க!