குஜராத் பள்ளி, கல்லூரிகளில் ஒற்றுமையின் சிலை!

குஜராத்:

குஜராத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் ஒற்றுமையின் சிலை எனப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிரதி சிலையை நிறுவ அம்மாநில அரசு கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

குஜராத் அரசின் ஏக்தா யாத்திரையில் பயன்படுத்தப்பட்ட பிரதி சிலைகள் பின்னர் பள்ளி, கல்லூரிகளுக்கு விநியோகிக்கப்பட்டது. அந்த சிலை பிரதிகளை கல்வி நிறுவனங்களில் நிறுவ கூடுதல் தலைமைச் செயலாளரான ஏ.எம். திவாரி கையெழுத்திட்ட சுற்றறிக்கையை அனுப்பி இருந்தது.

மேலும் அந்த சுற்றறிக்கையில், கல்வி நிறுவனங்களில் பிரதிகளை நிறுவுவதற்கு பெடஸ்டல் ஒன்றை அமைக்க வேண்டிய அவசியமில்லை. அதற்கு பதிலாக அவர்கள் பெரிய மண்டபத்தில் அல்லது சங்கிலி அல்லது கயிறு மூலம் நேர்த்தியான பாதுகாப்பு ஃபென்சிங் மூலம் வேறு எந்த பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலும் நிறுவப்படலாம் என்றும் அறிவுறுத்தியள்ளது.

சர்தார் வல்லபாய் படேலின் நினைவு நாளான டிசம்பர் 15-ம் தேதி தேதிக்குள் பிரதிகளை நிறுவ வேண்டும் என்றும் கோரியுள்ளது.