குடிநீரில் கலந்த பூச்சிக் கொல்லி தான் சிறு தலை நோய்க்கு காரணம் : பிரேசிலில் ஸிகா வைரஸூக்கு தொடர்பில்லை

Brazil's Microcephaly Outbreak

பிரேசிலியா:

பிரேசில் நாட்டில் சிறு தலை நோய் தாக்குதலுக்கு குடிநீரில் கலக்கப்பட்ட ரசாயனம் தான் காரணம் என தெரியவந்துள்ளது. அதனால் ஸிகா வைரஸூக்கும் இந்த நோய்க்கும் தொடர்பு இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரேசில் நாட்டில் பல மாநிலங்களில் சிறு தலையுடன் குழந்தைகள் பிறப்பது அதிகரித்துள்ளது. இந்த குறைபாடுக்கு ஸிகா வைரஸ் தான் காரணம் என கூறப்பட்டது. இதனால் சர்வதேச அளவில் ஸிகா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கர்ப்பணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் சிறு தலை குறைபாட்டுடன் குழந்தைகள் பிறப்புக்கு ஸிகா வைரஸ் காரணமல்ல என்று மருத்துவர்கள் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. டெங்கு, ஸிகா மற்றும் அதிக அளவில் நச்சுத் தன்மை கொண்ட ரசாயன தெளித்தல் போன்வற்றுக்காக செயல்படும் ‘பிஸிசியன்ஸ் இன் தி கிராப் ஸ்ப்ரேடு டவுன்’ (பிடிசிடி) என்ற அந்த அமைப்பு கூறியிருப்பதாவது:

2014ம் ஆண்டில் குடிநீரில் உள்ள கொசு முட்டை புழுக்களை அழிப்பதற்காக சுமிடோமோ என்ற ஒரு வகை பூச்சிக் கொல்லி மருந்து கலக்கப்பட்டது. நாடு முழுவதும் பிரேசில் அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தியது. மான்சான்டோவில் உள்ள ஒரு நிறுவனம் தான் இந்த ரசாயனத்தை தயாரித்துள்ளது.

இந்த ரசாயனம் கலக்கப்பட்ட குடிநீரை குடித்த பகுதிகளை சேர்ந்த ஆயிரகணக்கான பெண்களுக்கு சிறு தலை நோயுடன் கூடிய குழந்தைகள் பிறந்துள்ளது. பெர்னாம்புகோவில் தான் முதன் முதலில் இந்த நோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு மட்டும் 35 சதவீத நோய் தாக்குதல் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது கடந்த ஜனவரி மாத நிலவரப்படி வாஷிங்டன்னில் ஸிகா வைரஸ் தொடர்புடைய சிறு தலை குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட 4 ஆயிரத்து 180 பேரில், 732 பேருக்கு நிபுணர்கள் சோதனை நடத்தினர். இதில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு ஸிகா தாக்குதல் இல்லாதது தெரியவந்தது.

இதேபோல் கொலும்பியாவில் ஸிகா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான 3 ஆயிரத்து 177 கர்ப்பிணிகளில் ஒருவருக்கு கூட சிறு தலை குறைபாடு நோய் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஆதாரங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளது.
சுமிடோமோ ரசாயன நிறுவன இணையதளத்தில் , ‘‘ இந்த பூச்சி கொல்லி வகையை சேர்ந்த மருந்து பறவைகள், மீன், பாலூட்டிகளுக்கு சிறு அளவு பாதிப்பை ஏற்படுத்தும்’’ என குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.