குடியேற்ற சட்ட மசோதாவின் மீது மக்கள் கருத்து கோரும் வெளியுறவுத்துறை அமைச்சகம்

--

டில்லி

த்திய அரசு கொண்டு வர உள்ள குடியேற்ற சட்ட மசோதாவின் மீது மக்கள் கருத்தை வெளியுறவுத் துறை அமைச்சகம் கேட்டுள்ளது.

 

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கும் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கும் பலர் குடியேற்றம் செய்து வருகின்றனர். எனவே இது குறித்து சரியான விதிமுறைகள் தேவை என பாராளுமன்றத்தில் வெளியுறவுத் துரை அமைச்சகம் கேட்டுக் கொண்டது. அதை ஒட்டி விதிமுறைகளுக்காக சட்ட மசோதா ஒன்று உருவக்கப் பட்டுள்ளது. அந்த மசோதா குறித்து தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த விளக்கத்தில், “இந்த மசோதாவின் மூலம் குடியேற்ற மேலாண்மக்கான கொள்கைகள், விமர்சனங்கள் மற்றும் குடியேறியவர்கள் எண்ணிக்கைகளை கட்டுப்படுத்துதல் உள்ளிட்டவைகளை செய்ய முடியும். இந்த சட்டம் உள்துறை, மாநில மேலாண்மை மற்றும் மனித வளத்துறை ஆகிய அமைச்சகத்தின் ஒருங்கிணந்த ஒரு குழுவால் நிர்வகிக்கக்ப்படும். இதற்காக ஒரு புதிய இணைச்செயலர் நியமிக்கப்படுவார்.

இந்த மசோதா அமைக்க காலதாமதமாகி உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. ஆனால் இவ்வளவு பரந்த நாட்டில் குடியேறுபவர்கள் குறித்த சட்டம் அமைக்க உடனடி முடிவுகள் எடுப்பது நமது நாட்டு பாதுகாப்புக்கு மட்டுமின்றி வெளிநாடு செல்வோருக்கும் மிகவும் இடைஞ்சலை அளிக்கும்.

இந்த மசோதா இந்தியாவில் குடியேறுவோர் மட்டுமின்றி இந்தியாவை விட்டு வெளிநாடு செல்வோருக்கும் விதிமுறைகள் உண்டாக்க உள்ள சட்ட மசோதா ஆகும். மேலும் இது குறித்த மக்கள் கருத்துக்களையும் அமைச்சகம் கேட்டு வருகிறது. அதன் மூலம் ஏதும் மாற்றங்கள் செய்ய வேண்டி இருந்தால் அதையும் மசோதாவினுள் உட்கொணர திட்டமிடப்பட்டுள்ளது.” என அறிவிக்கப்பட்டுள்ளது.