2a
அண்ணன் குமரியாருக்கு உடல் நலம் இல்லாமல் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி கேட்டு, அதிர்ச்சி அடைந்தேன் !
‘இலக்கியச் செல்வர்’  குமரி அனந்தன் – மதுரையில் டுடோரியல் கல்லூரியில்  பேராசிரியராக வேலை பார்த்தார். அவரது பேச்சாற்றலை கண்டு வியந்த சொல்லின் செல்வர் – EVK சம்பத்,
அவரை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளராக நியமிக்க, காமராஜரிடம் பரிந்துரைத்தார் !
AICC தலைவரான காமராஜ், அப்போது TNCC தலைவராக இருந்த திரு. ரா. கிருஷ்ணசாமி நாயுடுவுக்கு தகவல் சொன்னார்.  திரு நாயுடு, குமரியாரை 1965 மே 15ல் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளராக நியமித்தார் !
அவரை நியமித்த பிறகுதான், அவர் நாடார் சமூகம் என்று தலைவர் காமராஜருக்கு தெரிந்தது !
அண்ணன் சம்பத்தை, காமராஜ் கடிந்துகொண்டார் !
[ அண்ணன் சம்பத்துக்கும், அனந்தன் நாடார் என்பது தெரியாது ! அவர் காங்கிரஸ் உணர்வாளர்,
விடுதலைப் போராட்ட வீரரின் மகன், நல்ல பேச்சாளர் என்பது மட்டுமே தெரியும் ! ]
தலைவர் காமராஜ் ஏன் சம்பத்தை கடிந்துகொண்டார் தெரியுமா ?
அவரது அரசியல் எதிரிகளான சி. சுப்ரமணியமும் பக்தவச்சலமும் ” காமராஜ் நாடார் – குமரி அனந்தன் நாடாரை – முக்கிய தலைவராக்கிவிட்டார் ” என்று, பிரச்சாரம் செய்வார்களே என்ற கவலைதான் !
காமராஜ் எதிர்பார்த்தபடி,அப்படியே பிரச்சாரமும் நடந்தது !
ஆனால், குமரி அனந்தனின் செயல்பாடு, அதை சுக்குநூறாக உடைத்தது !
குமரியாருக்கு சென்னையில், நானும் சில பேரும்தான், மிகவும் நெருக்கம் !
அவருக்கு, நுங்கம்பாக்கத்தில் ஏரிக்கரைக்கு கிழக்கே வீடு பிடித்து கொடுத்தது, நானும் நண்பர்களும்தான்.
அப்போது, தமிழிசை – கைக் குழந்தை ! குழந்தையை தூக்கி வைத்துக்கொண்டு, பராக்கு காட்டி,
அழையை நிறுத்துவோம் !
எனது நண்பர் எம்.கே. பாலகிருஷ்ணன் ஜாம்பஜாரிலிருந்து தமிழிசைக்கு ‘கிலுகிலுப்பை’
வாங்கிவருவார் !
குமரியாருடன் தமிழகத்தை, நாலு முறை வலம் வந்திருக்கிறேன் ! குமரியாரின் கார் போகாத –
கால் படாத கிராமம் – நகரம் தமிழ் நாட்டில் இல்லை !
எதிர்க் கட்சி பாத்திரத்தை எப்படி வகிப்பது என்று தெரியாமல் காங்கிரஸ் கட்சி திணறிய நேரத்தில்,
காமராஜரின் அனுமதியைப் பெற்று, 1967 அக்டோபர் 2ல் காந்திஜியின் 98-வது பிறந்த நாளில்
என்னுள்பட 98 இளைஞர்களுடன் குமரியில் பாத யாத்திரையை தொடங்கினார் !
இதுதான் அவருக்கு முதல் பாத யாத்திரை !
CHAIN SMOKER – அனந்தன், அக்டோபர் முதல் தேதி இரவோடு, குமரி முனை கடற்பரப்பில்
சிகரெட் பிடிப்பதை நிறுத்தினார் !
98 பேர் – 44 நாட்கள் – 600 மைல்கள் – 300 கிராமங்கள், நகரங்கள் வழியாக நடந்தோம் !
வழி நெடுக மக்கள் வெள்ளம் எங்களை வரவேற்றது !
கவிஞர் கண்ணதாசன் எழுதிய ”ஒன்றே பாரதம் – ஓங்குக ஒற்றுமை” என்ற பாடலை பாடியபடியே நடந்தோம் !
 
ப. நெடுமாறன் [ இப்போது பழ. நெடுமாறன் ] அப்போது மதுரை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் ! மதுரை மாவட்டத்தில் எங்களுக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தார் !
1967 நவம்பர் 14 நேரு பிறந்த நாளில் சென்னை கடற்கரையில் பாத யாத்திரையை நிறைவு செய்தோம் ! எங்களுக்கு பிரம்மாண்ட வரவேற்பு !
அன்று இரவு, அண்ணன் சிவாஜி கணேசன் அவரது வீட்டுக்கு AC பேருந்தில் எங்களை அழைத்துச் சென்று, விருந்து கொடுத்தார் !
குமரியாரின் இந்த முதல் பாத யாத்திரையில் – சென்னையிலிருந்து பங்கேற்ற ஆறு பேரில்,
நானும் கிருஷ்ணகுமார் என்ற நண்பரும் மட்டுமே உயிரோடு இருக்கிறோம் !
எனக்கு, பைபாஸ் சர்ஜரி நடந்தபோது [ 2010 செப்டம்பர் 17 ] – தகவல் அறிந்து, என்னை வீட்டில் வந்து சந்தித்து, நலம் விசாரித்தார் ! 1965 முதல் 1971 வரை, எனது குடிசை வீட்டுக்கு, 100 முறைக்கு மேல்
9835 – TNCC FIAT காரில் வந்திருக்கிறார் ! அப்போது நான் திருவல்லிக்கேணி சர்கிள்
இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் !
தொண்டர்களிடம் எப்போதும் பாசமாக இருப்பார் !
அவர் நலம் குன்றிய செய்தி, எனக்கு அதிர்ச்சியை கொடுத்தது !
அவர் நலமாகி எழுந்து, பாத யாத்திரையை நிறைவு செய்ய, அப்பன் முருகன் அருள் செய்ய வேண்டும் !
–       மூத்த பத்திரிகையாளர் திருஞானம் (முகநூல் பதிவு)