குறைகளை களையாவிட்டால் அம்மா தண்டிப்பார்: அமைச்சர் வைத்தியலிங்கம்

vaithiyalingam1

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இருந்த குறைகளை சட்டமன்ற தேர்தலில் களையாவிட்டால் அம்மா தண்டிப்பார் என செயல்வீரர்கள் கூட்டத்தில் அதிமுகவினரை அமைச்சர் வைத்தியலிங்கம் எச்சரித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை தொகுதியின் அதிமுக செயல்வீரர்கள் ஆலோசணை கூட்டம் தமிழக வீட்டுவசதிதுறை அமைச்சர் வைத்திலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

தஞ்சை அதிமுக வேட்பாளர் ரெங்கசாமியை அதிமுகவினரிடையே அறிமுகம் செய்து வைத்து பேசிய அமைச்சர் வைத்தியலிங்கம் கடந்த நாடாளுமன்ற தேர்தலைவிட அதிக வாக்குகளை சட்டமன்ற தேர்தலில் பெற வேண்டும் என வலியுறுத்தினார். நாடாளுமன்ற தேர்தலில் இருந்த குறைகளை சட்டமன்ற தேர்தலில் களையாவிட்டால் அம்மா தண்டிப்பார் என வைத்தியலிங்கம் எச்சரித்தார்.

சீர்காழியில் தொகுதி அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் சீர்காழியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் ஒ.எஸ் மணியன் கலந்துகொண்டு பேசும்போது சட்டமன்ற தேர்தல் வாக்குசேகரிப்பில் மெத்தனம் காட்டும் அதிமுகவினர் கட்சியில் நீடிக்க முடியாது என்று எச்சரித்தார்.