குறைந்தபட்சம் இரண்டு பெண்களை திருமணம் செய்துகொள்ள வேண்டும்! இல்லாவிட்டால் சிறைத் தண்டனை!

12642450_866911666754809_5466435702920711269_n

வ்வொரு இளைஞனும் குறைந்தபட்சம் இரு பெண்களை திருமணம் செய்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சிறைத்தண்டனை.  இப்படி ஓர் சட்டத்தை இயற்றியிருக்கிறது து எரித்திரியா நாட்டு அரசு.  மேலோட்டமாக பார்க்கும்போது இது நகைப்பிடமாகத் தோன்றும்.  ஆனால் வலி மிகுந்த உத்தரவு இது. சோகத்தின் வெளிப்பாடு.

ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ளது எரித்திரியா நாடு.   இந்நாட்டின் தெற்கே எதியோப்பியாவும், மேற்கே சூடானும் தென் மேற்கில் சிபூட்டியும் எல்லைகளாக அமைந்துள்ளன. மீதமுள்ள கிழக்கு, வடகிழக்கில்  செங்கடல்  உள்ளது.

அண்டை நாடான எத்தியோப்பியாவால் பல ஆண்டுகளாக  அடிமைப்படுக்கிடந்த தேசம் எரித்தியா. விடுதலை பெற நீண்டகாலம் போராடியது இந்த நாடு.   1993 ஏப்ரலில் நடந்த  வாக்கெடுப்பில்எத்தியோப்பிய நாட்டில் இருந்து பிரிந்து சுதந்திர நாடாக மாற வேண்டும் என்று மக்கள் வாக்களித்தனர். ஆனாலும் விடுதலை முழுமையாக கிடைக்கவில்லை. பிறகும் போராட்டம் நடக்க.. சுதந்திர தேசம் மலர்ந்தது.

ஆனால், இந்த, சுதந்திரமும் எளிதாக கிடைத்துவிடவில்லை.  மீக நீண்ட ஆயுதப்போராட்டம். அதன் விளைவாக, ஏராளமான இளைஞர்களின் உயிர் பறிபோனது.

இதனால், நாட்டில் ஆண்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துபோனது. கிட்டதட்ட ஒன்றரை லட்சம் போராளி இளைஞர்களை காவு கொண்டது விடுதலை போராட்டம்.

ஒரு புறம், பெண்களுக்கு மணமகன் கிடைக்காத நிலை. மறுபுறம், எதிர்கால சந்ததி அருகிவிடுமோ என்கிற அச்சம்.

ஆகவேதான், ஒரு ஆண், குறைந்தபட்சம் இரண்டு திருமணங்கள் செய்துகொள்ள வேண்டும் என்று சட்டம் இயற்றியிருக்கிறது அந்த நாடு.  ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம்  செய்துகொள்ளும் இளைஞர்களுக்கு   நிதி உதவி அளிப்பதாக ஏற்கெனவே அறிவித்தது.  ஆனால்,  இருதார மணங்கள் எதிர்பார்த்ததைப்போல நடக்கவில்லை. ஆகவே, இரண்டு மணம் புரியாதவர்களுக்கு சிறைத்தண்டனை என்று  சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது.

விடுதலைப்போராட்டத்தின் வலியை முழுமையாக அனுபவித்துள்ள எரித்திரியா நாடுதான், தமிழ் ஈழத்தை அங்கீகரித்த உலகின் ஒரே நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published.