குலாம்நபி சந்திப்பை நேரடி ஒளிபரப்பு செய்த கருணாநிதி  பேஸ்புக் பக்கம்!

dd

சென்னை:

மிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் குலாம் நபி ஆசாத், திமுக தலைவர் கருணாநிதியை இன்று நேரில் சந்தித்து பேசினார்.

இந்த நிகழ்வை, கருணாநிதியின் பேஸ்புக் பக்கம் நேரலையாக ஒளிபரப்பு செய்து அசத்தியது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், கூட்டணி தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியை  இன்று அவரது கோபாலபுரம் இல்லத்தில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் குலாம் நபி ஆசாத் சந்தித்து பேசினார். உடன்,  தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் முகுல்வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் இருந்தார்கள்.

இந்த சந்திப்பை கருணாநிதியின் பேஸ்புக் பக்கம் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி வீடியோ காட்சி நேரடியாக ஒளிபரப்பானது. அப்போது, பத்திரிகையாளர்கள் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க சொல்லி கேட்டது உள்ளிட்ட பல சப்தங்கள் தெளிவாக கேட்டன. புகைப்படங்களு  அந்த பேஸ்புக் பக்கத்தில் உடனுக்குடன்  பதிவு செய்யப்பட்டது.

எந்த ஒரு நவீன சாதனங்களையும் முழுமையாக பயன்படுத்தும் கருணாநிதியும், அந்த பேஸ்புக் பக்கத்தின் அட்மினும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

 

கார்ட்டூன் கேலரி