கேப்டன் விஜயகாந்த் அணி!

vaiko- vijayakanth
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு இன்று காலை 10 மணிக்கு மேல் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் வந்தனர். அங்கு தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது.

இதையடுத்து தேமுதிக அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய வைகோ,
’’தேமுதிக – மக்கள் நலக்கூட்டணி இனி ‘கேப்டன் விஜயகாந்த் அணி’ என்று அழைக்கப்படும். இது,
மக்கள் எதிர்பார்த்த கூட்டணி, மாற்றம் தரும் கூட்டணி, மகத்தான கூட்டணி, மாபெரும் வெற்றிக்கூட்டணி’’ என்று தெரிவித்தார்.