கேரள எஸ்பி மீது உரிமை மீறல்: மக்களவையில் மத்தியஅமைச்சர் பொன்.ராதாகிருண்ணன் நோட்டீஸ்

டில்லி:

பரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்ற மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணனை இடைமறித்து நக்கலாக பேசிய கேரள எஸ்பி. மீது, மக்களவையில் உரிமை மீறல் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

மத்தியஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடந்த மாதம் சபரிமலைக்கு சென்ற போது, பம்பைக்கு அவரது வாகனங்களை அனுமதிக்க மறுத்த கொச்சி மாவட்ட இணை ஆணையராக இருந்த யதீஷ் சந்திரா, அமைச்சருடன்  கடும் வாக்குவாதம் செய்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்த, மத்திய அமைச்சருடன் வாக்குவாதம் நடத்திய யதீஷ் சந்திரா இடம் மாற்றப்பட்ட நிலையில், அவர்மீது உரிமை மீறில் நோட்டீஸ் கொண்டு மக்களவையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருண்ணன் புகார் கூறினார்.

மேலும், கேரள அரசின் கெடுபிடி காரணமாக சபரிமலைக்கு பக்தர்கள் கடும் அவதிக்கு உள்ளாகிறார்கள். சபரிமலையில் போலீசார் தேவையின்றி பக்தர்களின் வாகனங்களை தடுத்தி நிறுத்தி பிரச்னை செய்கிறார்கள். நிலக்கல் அருகே தன்னுடன் வந்தவர்களின் வாகனங்களை கேரள காவல்துறை எஸ்.பி. தடுத்தி நிறுத்தி, அனுமதி வழங்க மறுத்துவிட்டார் என்று புகார் கூறினார்.

பொன்னாரின் நோட்டீஸ் தொடர்பாக கேரள எஸ்பி யதீண் சந்திராவிடம் விசாரணை நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி