கொரோனா காலத்தில் விடுமுறை என ஊர் சுற்றுவதா? : போப் ஆண்டவர் கண்டனம்

வாடிகன்

கொரோனா காலத்தில் விடுமுறை என ஊர் சுற்றுவதைக் கத்தோலிக்க தலைவர் போப் ஆண்டவர் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

கொரோனா தாக்கத்தின் இரண்டாம் அலை ஐரோப்பாவில் தொடங்கி உள்ளதாக கருதப்படுகிறது.  அத்துடன் பிரிட்டனில் தொடங்கிய உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் உலகின் பல நாடுகளிலும் பிரிட்டனில் இருந்து வந்தோரால் தொற்று அதிக அளவில் காணப்படுகிறது.  இதையொட்டி பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  பலரும் இதைச் சாக்காக வைத்து பலரும் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று கத்தோலிக்கர்களின் புனித தலைநகரான வாடிகன் நகரில் ஞாயிறு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது.  அந்த கூட்ட முடிவில் கத்தோலிக்க தலைவர் போப் பிரான்சிஸ் உரையாற்றினார்.  அவர் தனது உரையில், “கொரோனாவுக்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த கால கட்டத்தில் மக்கள் விமானத்தைப் பிடித்து அரசின் உற்றவை மீறி உல்லாச பயணம் மேற்கொண்டு ஊரைச் சுற்றி வருகின்றனர்.

அவர்கள் வீட்டிலேயே தங்கி உள்ளோர் பற்றி சிறிதும் சிந்திக்கவில்லை.   மேலும் இந்த கொரோனா ஊரடங்கால் பலருடைய நிதி ஆதாரங்கள் முழுவதுமாக சேதமடைந்துள்ளன.   ஆனால் இவர்கள் இது குறித்து எவ்வித கவலையும் இன்றி ஊரைச் சுற்றி வருகின்றனர்.  இது என்னை மிகவும் கவலையில் ஆழ்த்துகிறது.   இவர்கள் மூலம் வீட்டில் அடைந்து கிடப்பவர்களுக்கும் தொற்று உண்டாக வாய்ப்புள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.