கொரோனா தடுப்பூசி : கோடிக்கணக்கில் இஞ்செகஷன் ஊசிகளைச் சேகரிக்கும் ஐநா

ஜெனிவா

நா சபையின் குழந்தைகள் நிதியமான யுனிசெஃப் கொரோனா தடுப்பூசி போட வசதியாகக் கோடிக்கணக்கில் இஞ்செகஷன் ஊசிகளை வாங்கி சேகரித்து வருகிறது.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 கோடிக்கு மேல் ஆகி உள்ளது.  இதில் 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்   தற்போது 91 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.   கொரோனாவுக்கு சிகிச்சை ஏதும் கண்டறியப்படாமல் தடுப்பூசியும் கண்டுபிடிக்காத நிலையில் உள்ளது.  பல உலக நாடுகள் தடுப்பூசியை கண்டறிவதில் தீவிரம் காட்டி வருகின்றன.

தற்போது பெரும்பாலான தடுப்பூசிகள் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளதால் அனைவருக்கும் தடுப்பூசி அளிப்பதில் ஐநா சபையின் குழந்தைகள் நிதியமான யுனிசெஃப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  கொரோனா தடுப்பூசி எத்தனை டோஸ்கள் போடப்படுகிறதோ அத்தனை இஞ்செக்‌ஷன் ஊசிகள் தேவைப்படும்.   எனவே அவற்றை வாங்கி சேகரிக்கும் முயற்சியை யுனிசெஃப் செய்து வருகிறது.

சர்வதேச கொரொனா தடுப்பூசி கொள்முதல் மையம் இதற்காக யுனிசெஃப் செய்யும் செலவைத் திரும்ப அளிக்க முன்வந்துள்ளது.  இந்த இஞ்செக்‌ஷன் ஊசிகள் ஐந்து வருடம் வரை உபயோகிக்க தகுந்தவை ஆகும்.  இவை அனைத்தும் கடல் வழியாக அனுப்பப்படுகிறது.   தற்போது இறுதிக் கட்ட சோதனையில் உள்ள 42 தடுப்பூசிகளும் சோதனையில் வென்ற பிறகு கொள்முதல் செய்யப்பட உள்ளது.