கொரோனா : தமிழகத்தில் மாவட்ட வாரி பாதிப்பு பட்டியல்

சென்னை

ன்று தமிழகத்தில் மாவட்ட வாரி பாதிப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1515 பேருக்கு கொரோன பாதிப்பு உறுதி செய்யபட்டுளது.

தமிழகத்தில் ஒரே நாளில் 1500க்கு அதிகமானோர் பாதிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இதில் இன்று சென்னையில் 1156 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரை சென்னையில் 22149 பேர் பாதிக்கப்பட்டு 212 பேர் உயிர் இழந்து 10954 பேர் குணம் அடைந்துள்ளனர்.

அடுத்ததாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 1854 பேர் பாதிக்கப்பட்டு 15 பேர் உயிர் இழந்து 785 பேர் குணம் அடைந்துள்ளனர்.

மூன்றாவதாக திருவள்ளூர் மாவட்டத்தில் 1329 பேர் பாதிக்கப்பட்டு 12 பேர் உயிர் இழந்து 682 பேர் குணம் அடைந்துள்ளனர்.

 இன்றைய நிலவரப்படி நீலகிரி மற்றும் திருப்பூர் ஆகிய இரு மாவட்டங்களும் கொரோனா அற்ற மாவட்டங்களாக உள்ளன.

You may have missed