கொரோனா பாதிப்பு ஆய்வுக்காக மத்திய குழு இன்று சென்னை வருகை

சென்னை:
கொரோனா தடுப்புக்கு உதவ மத்திய அரசின் குழு இன்று சென்னை வருகிறது.

கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சகக் குழு சென்னைக்கு வந்திருந்தது.

இதைதொடர்ந்து, சென்னைக்கு வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சகக் குழு இன்று சென்னை வரவுள்ளது. இன்று சென்னை வரும் மத்திய குழுவில் சுனில் ஷர்மா, ரவீந்திரன், ராஜேந்திர ரத்னூ, சுஹால் தாண்டோர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

தமிழகம் மட்டுமின்றி இந்த குழு மேற்குவங்கம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகக் குழு சென்று ஆய்வு செய்ய உள்ளது.