கொல்லப்பட்ட பத்திரிகையாளர் உடல் துண்டு துண்டாக தூதர் வீட்டில் கிடைத்தது. ஊடகம்

ஸ்தான்புல்

வுதி தூதரகத்தில் கொல்லப்பட்ட பத்திர்கையாளர் ஜமாலின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு தூதர் இல்லத்தில் கிடைத்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன

வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் ஜமால் கஷோக்கி சவுதி அரசைப் பற்றியும் அந்நாட்டு இளவரசர் பற்றியும் கடுமையாக விமர்சித்து கட்டுரைகள் எழுதி வந்தார். இதனால் சவுதி அரசு கடும் அதிருப்தி அடைந்தது. சுமார் 59 வயதான இவர் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி தூதரகத்துக்கு கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி சென்றிருந்தார். அதன் பிறகு அவரைக் காணவில்லை.

அதன் பிறகு துருக்கி ஊடகங்கள் சவுதி தூதரகத்தில் ஜமால் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியிட்டன. அதை முதலில் மறுத்த தூதரகம் பின்பு ஒப்புக் கொண்டது. அதை ஒட்டி இந்த கொலைக்கு உத்தரவிட்டதாக சவுதி இளவரசர் மீது புகார் எழுந்தது. அதை சவுதி அரசு மறுத்துள்ளது. கொலை செய்யப்பட்ட ஜமால் உடலை தேடும் பணி நடந்துக் கொண்டு உள்ளது.

 

இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த செய்தியாளர் ஒருவர் வெளியிட்டுள்ள தகவலில் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதியின் தூதர் இல்லத்தில் கொல்லப்பட்ட ஜமால் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவருடைய முகத்தின் தோலை தனியாக உரித்ததாகவும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.  இந்த தகவலை துருக்கி நாட்டின் அரசியல் கட்சியான ரோடினா கட்சியின் தலைவர் தோகு பெரிஞ்சக் உறுதி செய்துள்ளார்.

ஏற்கனவே ஜமாலைப் போன்ற ஒருவர் அவர் கொல்லப்பட்ட அறையில் இருந்து அவருடைய உடைகளை அணிந்தபடி வெளியேறும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின. அந்த நபர் பெயர் முஸ்தபா அல் மதானி எனவும் ஜமாலைக் கொன்ற கூலிப்படையை சேர்ந்தவர் எனவும் துருக்கி ஊடகங்கள் தெரிவித்தன.   இந்நிலையில் இந்த புகைப்படங்கள் வெளியானது மேலும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.