கொள்ளையன் கைது: 13 பவுன் நகை பறிமுதல்

சென்னை: சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி நடை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

police-officer-arrested-thief-135640697

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புகூட சென்னை பட்டினம்பாக்கத்தில் நகை பறிக்க முற்பட்டபோது திருடனை பிடிக்க முற்பட்ட ஆசிரியை மற்றும் முதியவர் பலியானது பரபரப்பை ஏற்படுத்தியது. இதன்காரணமாக போலீசார் ரோந்து பணியில் தீவிரமாக உள்ளனர்.
சென்னை ஆவடி சுற்றுவட்டார பகுதிகளி ல் அடிக்கடி நகை பறிப்பு சம்பவங்கள் நடந்தன. போலீசாரின் கண்காணிப்பில் ஆவடி கோளடி எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவனது பெயர் குமரன் என்றும் வேலூர் வாலாஜாவைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. அவன் மீது 10-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் உள்ளது. குமரனை போலீசார் கைது செயத் போலீசார்  அவனிடமிருந்து 13 பவுன் நகையை கைப்பற்றினர்.