கோயிலுக்குள் நுழைய பெண்களுக்கு அனுமதி மறுக்கும் அவலம் !

பெண் கடவுள்களை வழிபடும் தேசத்தில், கோயிலுக்குள் நுழைய பெண்களுக்கு அனுமதி மறுக்கும் அவலம் !

ஆண், பெண் சமம், சமத்துவம் எனப்பேசி வந்தாலும் இன்னும் மத நிறுவனங்களான வழிபாட்டுத்தலங்களில் பாலினப்பாகுபாடுகள் தீவிரமாகவே கடைபிடிக்கப்படுகின்றன. தெய்வத்தின் முன்னிலையில் அனைவரும் சமம் என்று சொல்லப்படும் நம் இந்திய தேசத்தில் இன்னும் பல கோயில்களுக்குள்ளும், தர்காவுக்குள்ளும் பெண்கள் தீண்டத்தக்காதவர்களாகவே கருதப்படுகின்றனர். இதனால் பல  வழிபாட்டுத் தலங்களுக்குள் நுழையவும் அவர்களுக்கு தடை விதிக்கபப்ட்டுள்ளது. இச்சூழலில் மும்பை உயர்நீதிமன்றம் கோயிலுக்குள் செல்வது பெண்களின் அடிப்படை உரிமை என்று தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தின் அஹமத்நகர் மாவட்டம்,சானி சிங்கனாப்பீரில் உள்ள சனிபகவான் கோயிலுக்குள் பெண்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்தது. இக்கோயிலுக்குள் பெண்கள் சென்றால் கோயிலின் புனிதம் அசுத்தமாகிவிடும் என பரம்பரை பரம்பரையாகச் சொல்லப்பட்டு TH30_TEMPLE__jpg_2639448fவருகிறது. இதனை எதிர்த்து பெண்கள் அமைப்பினர் சிலர் அக்கோயிலுக்குள் ஆலய நுழைவுப்போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். அப்போது அவர்களை கோயிலுக்குள் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர்..

 

இதனை  எதிர்த்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தனர். அதில், கோயில்களுக்குள் வழிபாடு நடத்துவதற்கு பெண்களுக்கு விதிக்கப்படும் தடையானது, குடிமக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதுடன் மற்றும் சட்டவிரோதமும் ஆகும். எனவே, மகாராஷ்டிர இந்து மத வழிபாட்டுத்தல சட்டத்தை (ஆலய நுழைவு சட்டம்) அமல்படுத்த மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் கோரியிருந்தனர்.  இந்த மனு, மும்பை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஹெச். வகேலா, நீதிபதி எம்.எஸ். சோனாக் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் ஏப்ரல் 1-  வெள்ளிக்கிழமை அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தமது தீர்ப்பில் கூறியதாவது:-
கோயில்களுக்குள் வழிபாடு நடத்துவதற்காக உள்ளே செல்வது, பெண்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமையாகும். இந்த அடிப்படை உரிமையை பாதுகாக்க வேண்டியது, அரசின் கடமையாகும். இதனை உறுதிப்படுத்தும் வகையில் இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மகாராஷ்டிர மாநில அரசு எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மும்பை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தராவால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருந்தும் இந்தியாவின் பல வழிபாட்டுத்தலங்களில் பெண்கள் நுழைவதற்கான தடை  இன்னும் அமலில் இருப்பதுதான் சோகம். அவற்றைக் காண்போம்:-

ஹாஜி அலி தர்கா, மும்பை

ஹாஜி அலி தர்கா மும்பையின் முக்கியமான அடையாளங்களில் ஒன்று. இது  15-ம் நூற்றாண்டில்  மும்பை கடற்கரையில் கட்டப்பட்டது. இது  சுஃபி ஹாஜி அலியின் கல்லறையை கொண்ட  நினைவுச்சின்னம் ஆகும். புக்ழவாய்ந்த இத்தர்காவுக்குள் பெண்கள் யாரும் கல்லறை அருகில்  செல்ல அனுமதி கிடையாது.

 

haji-ali-shrine-234231_640

இதுதொடர்பாக அத்தர்காவின் அறங்காவலர்கள் மும்பை உயர்நீதிமன்றத்தில், “ இது ஆண் துறவி ஒருவரின் கல்லறை உள்ள இடம்.. இஸ்லாமிய முறைப்படி ஆண் துறவியின் கல்லறை அருகே பெண்கள் செல்வது பாவ காரியம் ஆகும். மேலும் இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 26 இன்படி மத அறக்கட்டளை அமைப்புகள் தங்கள் விவகாரங்களை தாங்களே கவனித்துக் கொள்வது அடிப்படை உரிமை ஆகும். இதில் மூன்றாம் நபர்களின் குறுக்கீடு அவசியம் இல்லை என்று தெரிவித்திருந்தது.

இதுதொடர்பாக பாரதிய முஸ்லீம் மகிளா என்ற அமைப்பு பொதுநல வழக்கு தொடர்ந்திருந்த்து. இதன் பின்னர் தர்காவின் கதவுகள் பெண்களுக்கு திறக்கப்பட்ட்து. இருந்தும் 2012 ஜூன் முதல் தர்காவின் கருவறைக்குள் பெண்கள் செல்ல அனுமதி இல்லை.

இதேபோல் டெல்லியில் உள்ள நிஜாமுதீன் தர்காவிலும் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு ஹஸ்ரத் நிஜாமுதீன் ஆலியா புதைக்கப்பட்ட கல்லறை அமைந்துள்ளது.  கதவுகளை மூடித்தான் இங்கு பெண்களை அனுமதிக்கின்றனர். இருந்தும் கல்லறை உள்ள பகுதிக்குள் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

சபரி மலை ஐயப்பன் கோயில்:-

இங்கு 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் ஐயப்பன் கோயிலுக்குள் செல்ல அனுமதி இல்லை. ஏனெனில் கோயிலுக்குள் செல்லும்போது பெண்கள் மாதவிடாயாக இருந்தால் கோயிலின் புனிதம் கெட்டு விடும் என்று கோயில் தரப்படுகிறது. சமீபத்தில் 35 வயது பெண்மணி ஒருவர் இங்கு நுழைந்து விட்டதால் அதற்கான சிறப்பு பரிகார பூஜையை நடத்தியதாக அக்கோயிலின் அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.

sabarimala-temple-thekkadi

இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், “கடவுள் ஆண், பெண் என்ற பேதம் பார்ப்பதில்லை. பிறகு ஏன் ஆண், பெண் என்ற பாலினப்பாகுபாடு  கோயிலுக்குள் மட்டும் கடைபிடிக்கப்படுகிறது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர்.

கடந்த மார்ச் 26 ஆம் தேதி நடைபெற்ற சபரிமலை ஆராட்டு விழாவில் மாதவிடாய்  வரும் பெண்கள் கலந்து கொள்ளக்கூடாது என கோயில் நிர்வாகம் மார்ச்-23 ஆம் தேதி அறிவித்திருந்தது.. இதற்குமுன்னர் இவ்விழாவினை பார்ப்பதற்கு பெண்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐயப்பன் சிலையை கோயில் கருவறையிலிருந்து எடுத்து வந்து பம்பா நதியில் மூழ்கி எடுப்பதுதான் ஐயப்பனுக்கு ஆராட்டு விழாவாக நடத்தப்படுகிறது.

 

கேரள பத்மநாத சுவாமி கோயில்:-

இந்துமதக் கோயில்களில் உலகத்திலேயே மிகவும் பணக்கார இந்துமதக் கோயிலான இங்கு பெண்கள் கோயில் வளாகத்துக்குள் மட்டும் அனுமதிக்கப்படுகிறார்கள். கோயில் கருவறைக்குள் இங்கும் பெண்களுக்கு அனுமதி இல்லை. இதுதொடர்பாக ஆராய்வதற்காக 2012 இல் உச்ச நீதிமன்றம் ஒரு நிபுணர் குழுவினை அமைத்த்து.அக்குழுவினர், பெண்கள் கோயில் கருவறைக்குள் செல்வது அறிவியல் ரீதியாக ஏற்புடையதல்ல என்று தெரிவித்த்து. இந்த முடிவுக்குப் பின்னர் பெண்கள் கருவறைக்குள் நுழையக்கூடாது என கோயில் நிர்வாகம் தடை விதித்தது.

பத்பாவூசி சாத்ரா, அஸ்ஸாம்.

கோயிலின் புனிதம் காக்கும் பொருட்டு இங்கும் பெண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கும் பெண்களின் மாதவிடாய்தான் காரணமாக காட்டப்படுகிறது. 2010 ஆம் ஆண்டில் இங்கு அஸ்ஸாம் ஆளுநர் பட்நாயக் இங்கு வருகை தந்திருந்தார்.அப்போது பெண்களுக்காக தடை குறித்து கோயில் நிர்வாகத்திடம் பேசி , 20 பெண்கள் கொண்ட ஒரு குழுவினை கோயிலுக்குள் அழைத்துச் சென்றார். இதனைத் தொடர்ந்து மிகவும் அபூர்வமாய பெண்கள் இங்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். பின்னர் அதுவும் நிறுத்தப்பட்டு விட்டது.

கார்த்திகேயக் கடவுளர் கோயில், புஷ்கர்.

முருகக் கடவுள் இங்கு பிரம்மச்சாரி கோலத்தில் கார்த்திகேயனாக காட்சி அளிக்கிறார் என்று கூறப்படுகிறது. எனவே பிரம்மச்சாரியரான கார்த்திகேயன் கோயிலுக்குள் பெண்கள் நுழைந்தால் ஆசிர்வதிப்பதற்கு பதிலாக சாபமிட்டு விடுவார் எனக்கூறி இங்கும் கோயில் நிர்வாகம் சார்பில் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரனக்பூர் கோயில், ராஜஸ்தான்:-

முற்றிலும் வெள்ளை பளிங்கு கற்களால் செதுக்கப்பட்ட இக்கோயில் உலகப்பிரசித்தி பெற்றதாகும். இதனை பார்க்க உலகத்தின் பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமான பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இருந்தும் கோயிலுக்கு வெளியே ஒருபெரிய  அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில்,பெண்கள் மாதவிடாய் காலங்களில் கோயிலுக்குள் நுழையக்கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்கள் மேற்கத்திய உடை கலாசாரத்துடன் வரக்கூடாது என்றும், கணுக்கால் வரை உடலை மறைக்கும் ஆடைகளை பெண்கள் அணிந்து கோயிலுக்குள் வரவேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற ரனக்பூர் கோயில் மட்டுமின்றி ராஜஸ்தான் மற்றும் மத்தியபிரதேசத்தின் பல சிறிய கோயில்களில்கூட பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

சிலையாக இருக்கும் பெண் கடவுள்களை வழிபடும் தேசத்தில், உயிரோடு இருக்கும் பெண்களை கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பது எந்தவிதத்தில் நியாயம்?

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published.