சண்டை போடும் ஸ்ருதிஹாசன்!

surya-shruthi

ஏழாம் அறிவு’ படத்தில் சூர்யா ஜோடியாக சுருதிஹாசன் நடித்தார். படம் சூப்பர் ஹிட். ஆனால் பிறகு நான்கு வருடங்களாக இருவரும் இணைந்து நடிக்கவில்லை.

இயக்குனர் ஹரி  இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் “சிங்கம் 3’படத்தில் ஜோடியாக மீண்டும் ஸ்ருதிஹாசன் நடிக்க இருக்கிறார்.இதற்கான பேச்சு வார்த்தை முடிந்து, ஸ்ருதியும் ஓ.கே. சொல்லிவிட்டாராம்!

நடிக்க அவர் போட்ட கண்டிசன் ஒன்றே ஒன்றுதான்:

“வெறும் டூயட் பாடும் ஹீரோயினாக இல்லாமல், எனக்கும் சண்டைக் காட்சி வைக்க வேண்டும்” என்பதுதான் அது.

இயக்குனர் ஹரி தயங்க.. விஷயம் அறிந்த சூர்யாவோ, “ அதனால் என்ன…தாராளமாக ஸ்ருதிக்கு ஃபைட் சீன் வைங்க” என்று சொல்லிவிட்டார்.

ஆக, சிங்கம் 3 –லில் சண்டை போடப்போகிறார் ஸ்ருதி!