சன்னி லியோன் இடத்தை கைப்பற்றினார் ஷ்ரத்தா தாஸ்…!

‘டெம்பர் என்னும் தெலுங்கு படத்தை தமிழில் ‘அயோக்யா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடித்த கேரக்டரில் தமிழில் நடிகர் விஷால் நடிக்கிறார்.

வெங்கட் மோகன் இயக்கும் இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்து வருகிறார். இந்நிலையில் இந்தப் படத்தில் இடம்பெறும் குத்துப் பாடல் ஒன்றுக்கு பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் நடனமாடுவதாககூறப்பட்டது.சன்னி லியோன் சம்பளம் கூடுதலாக கேட்பதால் அவருக்கு பதில் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா தாஸை படக்குழுவினர் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 'Ayogya', Shraddadas, sunnyLeone, Vishal
-=-