Random image

சபரிமலை : புரட்டாசி மாத பூஜைக்கு பக்தர்கள் அனுமதி

பரிமலை

திசை மாறி ஓடிய பம்பை ஆறு பழைய பாதைக்கு திருப்பி விடப்பட்டதை ஒட்டி புரட்டாசி மாத பூஜைக்கு சபரிமலை செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

கனமழையால் ஏற்பட்ட கேரள மாநில வெள்ளத்தில் சபரிமலை வெகுவாக பாதிக்கப்பட்டது.  பம்பையில் இருந்து சபரிமலை செல்லும் இரு பாலங்கள் மண்ணால் மூடப்பட்டன. பம்பை ஆறு திசை மாறி ஒடியது.  அங்கிருந்த பல கட்டிடங்கள், நடைபாதை ஆகியவை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன.    இதனால் பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

தற்போது வெள்ளம் குறைந்ததால் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.   மண்ணில் புதைந்த பாலங்கள் மீட்கப்பட்டு பம்பை ஆறு பழைய பாதைக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.   பாலங்களை சோதித்ததில்  அதிக சேதம் ஏற்படவில்லை என்பது தெரிய வந்தது.  வரும் 16 ஆம்தேதி முதல் புரட்டாசி மாத புஜைகளுக்காக சபரிமலை நடைதிறப்பு நடக்க உள்ளது.  அப்போது பக்தர்கள் சபரிமலை கோவில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.