சபரிமலை மண்டல பூஜை: அய்யப்பன் கோவிலுக்கு செல்ல 539 இளம்பெண்கள் முன்பதிவு!

திருவனந்தபுரம்:

பரிமலை மண்டல பூஜையின்போது,: அய்யப்பன் கோவிலுக்கு செல்ல 539 இளம்பெண்கள் இணைதளங்கள் மூலம் முன்பதிவு செய்திருப்பதாக கேரள மாநில அரசு தெரிவித்து உள்ளது.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள், அனைத்து வயதுடைய பெண்களும் வழிபடலாம் என்று  கடந்த செப்டம்பர் 29ந்தேதி உச்சநீதி மன்ற அமர்வு பரபரப்பு   தீர்ப்பு வழங்கியது.

உச்சநீதி மன்ற தீர்ப்பு ஆகம விதிகளுக்கு எதிராக உள்ளது என்று அய்யப்ப பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கேரள மக்கள் உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் மரபுகளை உச்சநீதி மன்றம் உடைந்தெறிந்து உள்ளதாக நாடு முழுவதும் உள்ள இந்துக்கள் கூறி வரும் நிலையில், கேரள மாநில பாஜக பிரச்சினையை பெரிதாக்க  மாநிலம் முழுவதும் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.

ஏற்கனவே கடந்த ஐப்பசி மாத பூஜை உள்பட தீபாவளி தினத்தன்று பூஜைக்கு செல்ல முயன்ற சில பெண்கள் போராட்டக்காரர்களால் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில்,  மண்டல, மகர விளக்கு பூஜைக்காக வருகிற 16-ந் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல விரும்பும் இளம்பெண்கள் ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்யலாம் என்றும், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் என்று கேரள மாநில அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், சபரிமலை அய்யப்பனை தரிசனம் செய்வதற்காக 539 இளம்பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,  மண்டல, மகர விளக்கு பூஜைக்காக வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. 17-ந் தேதி அதிகாலை முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து 40 நாட்கள் கோவில் நடை திறந்தி ருக்கும். அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந் தேதி மண்டல பூஜை நடைபெறும். பின்னர் கோவில் நடை சாத்தப்படும். 3 நாள் இடைவெளிக்கு பின் மீண்டும் கோவில் நடை டிசம்பர் 30-ந் தேதி திறக்கப்பட்டு ஜனவரி 20-ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும். முன்னதாக ஜனவரி 14-ந் தேதி மகரவிளக்கு பூஜையும் நடக்கிறது.

இந்த சமயத்தில் சபரிமலை அய்யப்பனை தரிசிக்க நாடு முழுவதும் இருந்த லட்சக்கணக்கானோர் சபரிமலையில் குவிவார்கள். இதற்காக சுமார் மூணறை லட்சம் ஆண் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ள நிலையில், 539 இளம்பெண்களும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த பெண்கள் அனைவரும் 10 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சபரிமலை விவகாரம் மீண்டும் சூடுபிடித்து உள்ளது. இளம்பெண்களுக்கு தேவையான  பாதுகாப்பு வழங்க கமாண்டோ படையை குவிக்க கேரள மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கேரள மாநில பாஜக போராட்டத்தையும் தீவிரப்படுத்தி உள்ளது. அதே வேளையில் லட்சக்கணக்கான பக்தர்களும் மலையில் குவிவதால் இப்போதே பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இதற்கிடையில் சபரிமலை குறித்த உச்சநீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீடு மனு மீதான விசாரணை 13ந்தேதி உச்சநீதி மன்றத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Sabarimala Mandala Pooja: 539 women aged between 10-50 apply for sabarimala ayyappan temple visit, சபரிமலை மண்டல பூஜை: அய்யப்பன் கோவிலுக்கு செல்ல 539 இளம்பெண்கள் முன்பதிவு!
-=-