சமத்துவ மக்கள் கட்சியில் புதிய நிர்வாகிகள் நியமனம்

sarth1

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ., வெளியிட்ட அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

’’அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நெல்லை மேற்கு மாவட்ட செயலாளராக கே.வி. கண்ணன், நாகை வடக்கு மாவட்ட செயலாளராக கே.எம்.அருணாசலம், நாகை தெற்கு மாவட்ட செயலாளராக தெய்வசிகாமணி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே மாவட்ட பொறுப்பாளர்களாக இருந்து வந்த திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சந்தனகுமார், வேலூர் மேற்கு மாவட்டம் எம்.ஞானதாஸ், வேலூர் மத்திய மாவட்டம் சசிகுமார், தர்மபுரி மாவட்டம் முருகன் ஆகியோர் மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் திருப்பூர் மாநகர மாவட்ட பொறுப்பாளராக அஷ்வத் ஜோதி நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட துணை செயலாளராக வி.எஸ்.லிங்கம், கும்மிடிப்பூண்டி தொகுதி செயலாளராக எஸ்.துரைஅரசன், பொன்னேரி தொகுதி செயலாளராக ஜி.கசகாத்தப் பெருமாள் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.
கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.’’

கார்ட்டூன் கேலரி