சரத் மீது சட்டப்படி நடவடிக்கை! : கார்த்தி எச்சரிக்கை!

சரத்குமார்

“சரத்குமார் தலைமையிலான நடிகர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் முழுமையான கணக்கு காட்டவில்லை. இதுகுறித்து பலமுறை கடிதங்கள் அனுப்பியும் பலனில்லை.

தேர்தல் முடிந்து, 15 நாட்களில் கணக்கு கொடுப்பதாக கூறியிருந்தனர். ஆனால், இன்னும் கணக்கு காட்டவில்லை. நடிகர் சங்க கணக்குகளை உடனே ஒப்படைக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் “ என்று நடிகர் சங்க பொருளாளர் சரத்குமாருக்கு எச்சிரிக்கை விடுத்திருக்கிறார்.

கார்த்தி

அதே போல, நடிகர் சங்க இடத்தில் கட்டிடம் கட்டுவது குறித்தும் முக்கிய முடிவை அறிவித்தார் விஷால். அவர், “நடிகர் சங்க கட்டிட பணி விரைவில் ஆரம்பிக்கப்படும். எஸ்.பி.எஸ் சினிமா ஒப்பந்தத்தை ரத்து செய்யும் முடிவு இறுதி செய்யப்பட்டுவிட்டது. நட்சத்திர கலைவிழா நடத்தாமல் நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்டப்படும் “ என்றார்.

அதோடு, இவரும் சரத்குமாரை குற்றம் சாட்டினார்.

“முன்னாள் தலைவர் சரத்குமார் சினிமாஸுடனான ரத்து ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தது பொய். தற்போது தான் அந்த ஒப்பந்தத்தை முழுமையாக ரத்து செய்திருக்கிறோம் “ என்றார்.

பீப் விவகாரத்தில் ராதிகாவுக்கு நோட்டீஸ், கணக்கு விவகாரத்தில் சரத்துக்கு நோட்டீஸ்! மேட்பார் ஈச் அதர் என்பது இதுதானோ?

1 thought on “சரத் மீது சட்டப்படி நடவடிக்கை! : கார்த்தி எச்சரிக்கை!

  1. சிறுவன் கார்த்தி, சிறுவன் விஷால், கிழவன் நாசருக்கு தெரியாது போல. வரவு செலவு கணக்கு விவரங்களை பற்றி பொருளாளர் சந்திர சேகர் மீது மட்டுமே வழக்கு தொடுக்க முடியும் என்பது.

Leave a Reply

Your email address will not be published.